பக்கம்:திருவருட்பாவில் பெரும்பொருட் குவியல்-திருமணவிழா மலர்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

30

77. அபரோக்ஷ ஞானானுபவ விலாசப் பிரகாசம்-கண் காது முதலிய கருவிகளால் கண்டு கேட்டுப் பொருள்களை அனுபவித்து அறியும் ஞானம், அபரோக்ஷ; ஞானம். இவ்வபரோக்ஷ ஞானத்தால் ஐயம் திரிபின்றி உணரப் படுவது. (விலாசம்-ஐயம் திரிபின்றி உணர்விப்பது; பிரகாசம்-விளக்கமானது; அபரோக்ஷம் - கண்ணுக்குப் புலப்படுவது. அக்ஷம், எல்லா இந்திரியங்களையும் குறிக்கும்).

78. பாவனாதீதம்-(மனம் முதலிய கருவிகளைக் கொண்டு நினைப்பது, பாவனை): பாவனைக்கு எட்டாதது.

79. குணாதீதம்-குண தத்துவத்துக்கு அப்பாலானது,

80. உபசாந்தப்பதம்-இறைவனது திருவடி ஞானத்தில் ஒடுங்கி நிற்றல் உபசாந்தம் எனப் பெறும். இவ்வுபசாந்த நிலை யில் அடைவதற்குரியது.

81. மகா மெளன ரூபம்-உபசாந்த நிலையில் இருக்கும் ஆன்மா வுக்குத் தோன்றும் நிலை, மிக்க மோன நிலையாகிய உருவம்.

82. பரமபோதம்-மேலாய அறிவால் போதித்து அறியப்படுவது.

83. போதரகித சகிதம்-போதிக்க வேண்டா நிலையது; போதிக்க வேண்டும் நிலையது.

84. சம்பவாதீதம்-பிறப்பு (இறப்புக்கு) அப்பாற்பட்டது.

85. அப்பிரமேயம்-பிரமாணங்களால் அளக்கலாகாதது.

86. பகர் அனந்த ஆனந்தம்-வரம்பில் இன்பமுடையது.

87. அமலம்-அனாதியே மலத்தொடர்பு இல்லாதது.

88. உசிதம்-பொருத்தம் ஆனது (நீதியே உருவானது).

89. சித்பதம்-அறிவே வடிவானது.

90. சத் ஆனந்த சாரம்-சத் ஆனந்தம் ஆகியவற்றின் சாரமாக விளங்குவது.

91. பரையாதி கிரணாங்கம்-பராசக்தி, ஆதிசக்தி, கிரியாசக்தி, இச்சாசக்தி, ஞானசக்தி என்ற ஐந்து சக்திகள் தரும் ஒளி மயமான மேனியையுடையது.

92.சாங்க செளபாங்கம்-எல்லா அங்கங்களும் மங்கல வடிவ மாய்த் திகழ்வது.

93. விம்பாகாரம்-கண்ணாடியில் தோன்றும் விம்பம் போல்வது,