31
94. நிருவிகற்பம் -உருவம் பெயர் குணம் செயல் முதலியன இல்லாதது.
95. பரசுக ஆரம்பம்-சிவ ரூப, தரிசன, யோக, போகத்தால் பெறப்படும் இன்பம் தோன்றுவதற்கிடமாயது.
96. பரம்-ஞானத்தால் தொழும் ஞானிகள் பெறலாவதாகிய சாயுச்சிய இன்பமாக விளங்குவது.
97. பிரமவித்தம்-பிரம ஞானமாக விளங்குவது.
98. பரானந்தம்-சிவானந்தமாவது.
99. புரண போகம்- (ஸ்புரணம்-புரணம்) உலகத்தைப் படைக்கும் துடிப்பு உடையது . {பூரணம்-குறைவிலா நிறை வுடையது).
100. பரிமிதாதீதம் - (பரிமிதம் -அளவானது) அளக்கலாகா அளவினது.
101. பரோதயம் -(பரையாகிய அருட்சக்தியின்) ஞானம் தோன்று வதற்கு இடமாயது.
102. பரகிதம்-தன்னின் வேறாய உயிர்கட்கு உறுதிப் பொரு ளாக இருப்பது.
103. பரபரினம்-(ஈடனம்-ஈனம் ஆயிற்று, ஈடனம்-செல்வம்);மேலான செல்வம் ஆயது.
104. பராந்தம்-மேன்மைக்கு மேல் முடிவாக இருப்பது.
105. பரமாற்புதம்-மிக்க அற்புதமாயது.
106. பரமசேதனம்-மேலான சித்துப் பொருள் (சித்து-அறிவு).
107. பசுபாச பாவனம் - உயிர்களைப் பிணித்திருக்கும் மலங் களைப் போக்குவது: (பசு-உயிர்: பாசம்-மலம்: பாவனம் தூய்மைப்படுத்துவது).
108. பரமமோக்ஷம் -பரமுத்தி; மேலான முத்தி.
109. பரமானுகுணம்-மேலான ஏற்புடைய பொருள்.
110. நவாதிதம்-சிவம்சத்தி நாதம் விந்து என்ற அருவத் திருமேனி நான்கும், மகேசுரன் உருத்திரன் அயன் திருமால் என உருவத் திருமேனி நான்கும் சதாசிவம் என்ற அருவுருவத் திருமேனி ஒன்றும் என்ற ஒன்பது வடிவாகவும், அவற்றிற்கு மேலாகவும் உள்ளது.
111. சிதாகாச பாஸ்கரம்-ஞானமாகிய ஆகாயத்தில் விளங்கும் சூரியன் ஆக விளங்குவது.