எச்சம யத்தும் இலங்கிய பாதம்
எள்ளுக்குள் எண்ணெய்போல் எங்குமாம் பாதம்
அச்சம் தவிர்த்தெனை ஆட்கொண்ட பாதம்
ஆனந்த நாட்டுக் கதிபதி பாதம். - (ஆ)
தேவர்க ளெல்லாரும் சிந்திக்கும் பாதம்
தெள்ளமு தாயுளம் தித்திக்கும் பாதம்
மூவரும் காணா முழுமுதற் பாதம்
முப்பாழுக் கப்பால் முளைத்த பொற்பாதம். (ஆ)
துரிய வெளிக்கே உரியபொற் பாதம்
சுகமய மாகிய சுந்தரப் பாதம்
பெரிய பொருளென்று பேசும்பொற் பாதம்
பேறெல்லாம் தந்த பெரும்புகழ்ப் பாதம். (ஆ)
சாகா வரந்தந்த தாரகப் பாதம்
சச்சி தாநந்த சதோதய பாதம்
தேகாதி யெல்லாம் சிருட்டிக்கும் பாதம்
திதிமுத லைந்தொழில் செய்கின்ற பாதம். (ஆ)
ஓங்கார பீடத் தொளிர்கின்ற பாதம்
ஒன்றா யிரண்டாகி ஓங்கிய பாதம்
தூங்காத தூக்கத்தில் தூக்கிய பாதம்
துரியத்தி லூன்றித் துலங்கிய பாதம். (4.)
அருட்பெருஞ் ஜோதிய தாகிய பாதம்
அம்மையும் அப்பனும் ஆகிய பாதம்
பொருட்பெரும் போகம் புணர்த்திய பாதம்
பொன்வண்ண மாகிய புண்ணிய பாதம், ! (ஆ)