பக்கம்:திருவருட்பா-11.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32 திருவருட்பா

தாரகாசுரன் பிள்ளைகளாகிய தாரகாட்சன், கமலாட்சன், வித்யுன்மாலி ஆகிய மூவரும் இரும்பு, பொன், வெள்ளி ஆகிய மூன்று உலோகங்களால் ஆன மதில்கள் சூழ்ந்த கோட்டை வேண்டும் என்றும், அக்கோட்டையுடன் எங்கும் சென்று வருதல் வேண்டும் என்றும் பிரமனேக் கேட்டனர். அவனும் அவ்வாறே கொடுத்தனன். அவர்கள் அதனேப் பெற்று ஆகாய வழியே சென்று தேவர்களேத் துன்புறுத்தி வந்தனர். இதனுல் வருந்திய தேவர்கள் சிவபெருமானேச் சரணடைய, சிவபெருமான் தேவர்களேயும் உடன் அழைத்து முப்புராதிகளே அழிக்கப் புறப்பட்டனர். அப்போது தேவர் கள் தம் உள்ளத்தில் நம் துனே இன்றெனில் சிவபெரு மானுல் முப்புராதிகளே அழிக்கமுடியாது என்று எண்ணி னர். எங்கும் நிறைந்துள்ள இறைவன் தேவர்களின் அறி யாமையை எண்ணிச் சிறிது புன்னகை புரிந்தனன். அந் நகையினின்று தீப் பொறி தோன்றி அதுவே முப்புராதிகளே அழித்தது. இந்த வரலாறே “புரம் நோக்கினுல் பொடி தேக்கிய ஒற்றிப் புனிதர்’ என்னும் வரியில் அமைந்துளது.

தேவர்கள் அசுரர்களால் துன்புற்று இறப்பதை அறிந்து இறவாதிருக்கப் பிரமணிடம் வழி வகைகளைக் கேட்டனர். அப்பிரம்ம தேவன் திருமாலுடன் கலந்து ஆலோசிக்கத் திருமால், திருப்பாற் கடலைக் கடைந்து அமுதம் பெற்று உண் டால் இறவாமல் இருக்கலாம் என்று கூற மைந்நாக மலையை மத்தாகவும், வாசுகியாம் பாம்பைக் கயிருகவும் கொண்டு கடலைக் கடையப் பாம்பு தன் ல்ை பொறுக்க முடியாமல் விடத்தைக் கக்கியது. அதனேக் கண்டு ஓடிய தேவர்கள் சிவபெருமானிடம் முறையிட அவர் அந்த விடத்தைக் தாம் ஏற்று உண்டு தேவர்களைக் காத்தனர். அந்த விடம் இறை வ8ன ஒன்றும் செய்யாமைக்குக் காரணம் இறைவி, இறை வரை அந்தத் தருணம் பாதுகாத்த முறைமையில்ை ஆகும். இதனை மாதவச் சிவஞான சுவாமிகள் தம் அமுதாம்பிகை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருவருட்பா-11.pdf/102&oldid=681581" இலிருந்து மீள்விக்கப்பட்டது