பக்கம்:திருவருட்பா-11.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடிவுடை மாணிக்க மாலை இதி:

(வி - ரை.) திருஒற்றியூருடையார் எப்போதும் அறிஞர் களால் சிந்திக்கும் பரம் பொருள் ஆதலின், ‘உன்னும் திரு ஒற்றியூர் உடையார்” எனப்பட்டார். இறைவியின் கருணை வார் அமுதுதான், உயிர்களாகிய பயிர்கள் தழைக்கத் துணை செய்வது, இந்தக் கருத்தில்தான் ‘உயிர்ப் பயிரெல்லாம் தழைக்கத் திரு அமுது ஓயாமல் ஊற்றி’ என்றனர். முருகன் கருணையும் உயிர்ப் பயிரை வளர்க்கும் என்று குமரகுருபரர் ‘சகல புவனத்திலும் உயிர்ப் பயிர்த் தழைப்ப நல் தண்ணளி சுரந்திடுதல்’ என்று கூறுவர். இறைவி இறைவனது நெஞ்சம் மகிழ அவன் உள்ளத்தில் விளங்குவதைக் குமர குருபரர், ஒருவன் திரு.உள் ளத்தில் அழகொழுக எழுதிப் பார்த் திருக்கும் உயிர் ஓவியமே என்றும், அத்தன் மனத்து எழுதிய உயிர் ஓவியம்’ என்றும் கூறுதல் காண்க. (33)

வெள்ளம் குளிரும் சடைமுடி யோன் ஒற்றி வித்தகன்தன் உள்ளம் குளிர்மெய் பூரிப்ப ஆனந்தம் ஊற்றெடுப்பத் தெள்ளம் குளிர்இன் அமுதே அளிக்கும்.செவ் வாய்க்குமுத வள்ளம் குளிர்முத்த மானே வடிவுடை மாணிக்கமே.

(பொ , ரை.) கங்கையின் வெள்ளப் பெருக்கில்ை குளிர்ந்திருக்கும் சடைமுடி யுடைய திருஒற்றியூரில் வீற்றிருக் கின்ற மேலோனுகிய தியாகப் பெருமானது மனம் குளிர, உடல் மகிழ்ச்சியினுல் பொலிவு பெற, ஆனந்தப் பெருக் கெடுப்பக் கிண்ணம் போன்ற சிவந்த குமுத மலராகிய வாயி குல் தெளிவுடைய குளிர்ந்த இனிய தேவா.முதமாம் முத் த்த்தைத்தரும் மானே! வடிவுடை மாணிக்கமே! (எ . து.)

(அ. சொ.) வெள்ளம் - கங்கையாகிய வெள்ளம். வித்தகன் . மேலோன். பூரிப்ப - பொலிய, ஊற்றெடுப்ப, பெருக தெள்ளம் - தெளிவு. வள்ளம் - கிண்ணம். மேய் - உடல்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருவருட்பா-11.pdf/105&oldid=681584" இலிருந்து மீள்விக்கப்பட்டது