பக்கம்:திருவருட்பா-11.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6 திருவருட்பா

(இ கு.) குமுதம், வள்ளமாக உருவகம் செய்யப் பட்டது.

(வி - ரை.) இறைவி இறைவன் மகிழத் தன் குமுத மலர் போன்ற வாயால் அவனுக்கு முத்தம் தந்து இன்புறுத்து வதை நம் ஐயா இப்பாடலில் குறிப்பிடுதல் காண்க. இதல்ை இறைவன் உள்ளம் குளிர்கிறது. உடம்பு பூரிக்கிறது. ஆனந்தம் பெருக்கெடுக்கிறது. . (34)

மாநந்தம் ஆர்வயல் காழிக் கவுணியர் மாமணிக்கன் ருநந்த இன்அமு துற்றும் திருமுலை ஆர்அணங்கே காநந்த ஒங்கும் எழில்ஒற்றி யார்உள் களித்தியலும் வானம் தரும்இடை மனே வடிவுடை மாணிக்கமுே.

(பொ. - ரை.) “பெரிய சங்குகள் நிறைந்த வயல்கள் சூழ்ந்த சீர்காழிப் பதியில் தோன்றிய திருஞான சம்பந்தராகிய உயர்ந்த மணிபோன்ற அந்தணச் சிறுவர்க்கு முன்னொரு சமயம் ஆனந்தமான இனிய ஞான அமுகத்தை ஊற்றுகின்ற அழகிய முலைகள் பொருந்திய பேரழகு உடைய தேவி! சோலைகள் பெருக ஒங்கும் திருஒற்றியூரர் உள்ளத்தி, மகிழ்ந்து தங்கி, அன்பர்கட்கு விண்ணுலகப் பேற்றைத் தரும் நுண்ணிய இடையினேப் பெற்ற மானே! வடிவுடை மாணிக்கமே! (எ . து.)

(அ - சொ.) மா - பெரிய நந்தம் - சங்குகள். ஆர் . நிறைந்த காழி - சீர்காழிப்பதி, கவுணியர் கெளயை, கோத்திரத்தில் தோன்றிய திருஞான சம்பந்தர். மா. சிறந்த, அணங்கு - பேர் அழகு. (இங்கு இறைவியைக் குறித்து திற்கிறது) கா - சோலே. நந்த பெருக எழில் - அழகிய. வானம் - விண்ணுலகப் பேறு.

(இ - கு.) மா, உரிச்சொல். நந்து + அம், அம். சாரியை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருவருட்பா-11.pdf/106&oldid=681586" இலிருந்து மீள்விக்கப்பட்டது