பக்கம்:திருவருட்பா-11.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடிவுடை மாணிக்கமா8ல 9 &

வைவைத் தமைத்த மதர்வேல் கண் வாழ்வே வருக வருகவே வளங்கூர் குளந்தைப் பதிஅமுத

வல்லி வருக வருகவே’ என்றும் மாதவச் சிவஞான சுவாமிகள் பாடுவார் ஆயினர். மங்களாம்பிகை பிள்ளைத்தமிழ், பண்டோர் மறைக்குழவி உண்ண மெய்ஞ்ஞான இன்பால் அருள் பிராட்டி வந்தாள்” என்று போற்றிப் புகழும். இந்த வரலாற்றையே நம் வள்ள லார், கோழிக் கவுணியர் மாமணிக்கு அன்று அருந்த இன் அமுதுாற்றும் திருமுலை.ஆர் அணங்கு’ என்றனர். இறைவி இறைவன் உள்ளத்தில் அவர் களிக்க விளங்குபவள் என்பது முன்பே கூறப்பட்டது. (35}

வான்தேட நான்கு மறைதேட மாலுடன் வாசிசமே லான்தேட மற்றை அருந்தவர் தேடஎன் அன்பின்மையால் யான்தேட என் உளம் சேர்ஒற்றி ஆர்எம் இருநீதியே மான்தேடும் வாள்கண் மயிலே வடிவுடை மாணிக்கமே.

(பொ. - ரை.) தேவர்கள் தேடவும், நான்கு வேதங்கள் தேடவும், திருமாலும், தாமரை மலர் மீதுள்ள பிரமனும் தேடவும், ஏனைய அரிய தவசிகள் தேடவும் என்னிடம் அன்பு இல்லாத காரணத்தால் யானும் தேடவும், என் உள்ளத்தே சேர்ந்து விளங்கும் திருஒற்றியூரில் வாழும் பெருஞ் செல்வமே ! மான் தேடுகின்ற ஒளிபொருந்திய கண் களைப் பெற்ற மயிலே வடிவுடை மாணிக்கமே !’ (எ-து.)

(அ.சொ.) வான் - தேவலோகத்தில் உள்ள தேவர் கள். மறை - வேதம். மால் - திருமால். வனசம் . தாமரை, வனச மேலான் - தாமரையில் வீற்றிருக்கும் பிரமன். இன்மை . இல்லாமை. இருநிதி - பெருஞ்செல்வம். வாள் - ஒளி.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருவருட்பா-11.pdf/109&oldid=681590" இலிருந்து மீள்விக்கப்பட்டது