பக்கம்:திருவருட்பா-11.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

t 02 திருவருட்பா

மானே வடிவுடை மாணிக்கமே உன்னே வணங்கும் நன்ேைள சிறந்த நாளாகும். அப்படி வணங்காமல் விணுக்கிய நாள்கள் ஆகாத நாட்களாகும் ‘ என்று வேதங் கள் எல்லாம் சொல்லும் உண்மைக் கருத்தை உணர்ந்து ஒருநாள் கூட அன்பர்கள் உன்னே வணங்க மறக்க மாட்டார் கள் ” (எ . து.)

(அ - சொ.) மரு - வாசனை. நாள் - புதி. குழல் . கூந்தல். திரு - சிறந்த கருநாள் - ஆகாத நாட்கள். மறை - வேதம். புகலும் . சொல்லும்.

(இ - கு.) மறவார் அன்பர், வினேமுற்றுத் தொடர்.

(வி - ரை.) இறைவியின் கூந்தல் என்றும் இயற்கை மணத்துடன் செயற்கை மணமும் பொருந்தப் பெற்றிருக்கும் ஆதலின் மருநாள் மலர்க் குழல் மானே’ எனப்பட்டாள். முதல் அடி பெரும்பற்றப் புலியூராஃாப் பேசாத நாள் எல்லாம் பிறவா நாளே எனும் அப்பர் பெருமானின் திருவாக்கை நினைப்பிக்கின்றது. அன்பர்கள் எப்போதும் இறைவியைத் நினைந்தவண்ணம் இருப்பதற்குரிய கார ணத்தை நம் ஐயா இங்குத் தெளிவுறக் கூறியுள்ளனர். (38)

வாணுள் அடைவர் வறுமை உருக்நல் மனே மக்கள் பொன் பூணுள் இடம்புகழ் போதம் பெற வர்பீன் புன்மைஒன்றும் காணுத்தின் நாமம் கருதுகின் ருேiஒற்றிக் கண்துதல்பால் மாளுர்வம் உற்ற மயிலே வடிவுடை மாணிக்கமே.

(பொ ரை.) திருஒற்றியூரில் வாழ்கின்ற நெற்றிக்கண் படைத்த முக்கண் மூர்த்தியினிடத்தில் மாட்சிமை பொருந் திய அன்பு கொண்ட மயிலே வடிவுடை மாணிக்கமே ! உன் திருப்பெயரை எப்போதும் எண்ணுகின்றவர்கள், நீண்ட ஆயுளைப் பெறுவர்; தரித்திரத்தால் துன்பம் அடையமாட் டார்கள். நல்ல மனேவியையும், மக்களையும், பொன்னேயும்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருவருட்பா-11.pdf/112&oldid=681594" இலிருந்து மீள்விக்கப்பட்டது