பக்கம்:திருவருட்பா-11.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4 திருவருட்பா

(பொ , ரை.) கச்சினையும் விலக்கிக்கொண்டு பூரிக்கும் ஆபரணங்களே அணிந்த கொங்கைகளே யுடைய மானே! வடிவுடை மாணிக்கமே சிறந்த பேரறிவாய்த் திகழும் திருஒற்றியூரில் வாழும் பரமசிவத்தை நினேப்பவர்கள் யார் யார் என்பதை அறிபவளே! அந்த அறிவாம் வெளிக்கும் அப்பால் விளங்கி நின்றவளே! இத்தகைய உன் அருமை பெருமைகளே யார் அறிவார்கள்? அப்படி இருக்க நாயினும் கடைப்பட்ட நான் அறிவது வெகு அழகாய் இருக்கிறது!” {57 - gl.)

(அ- சொ. வார் - கச்சு. பூண் - ஆபரணம். வெளி . ஆகாயம்,

(இ - கு.) நி ைப்போர், வினையால் அணையும் பெயர். அழகுடைத்தே என்பதில் உள் ள ஈற்று ஏகாரம் எதிர்மறைப் பொருளது.

(வி ரை.) இறைவியின் கொங்கை பருத்துத் திரண்டு இருத்தலின், அதன்மீது கட்டப்படுகின்ற கச்சும் (இக்காலத் தில் கூறப்படுகின்ற இரவிக்கை போன்றது ) பொருந்தப் பெரு மல் விலகுதலின் வார் ஏறி பூண் முலே’ எனப்பட்டது. இறைவர் அறிவு மயமாய்த் திகழ்பவர், பேரறிவே இன்பப் பெருக்கே பரா பரமே’ என்பது தாயுமானுர் வாக்கு. எனவே தான் சீர் அறிவாய்த் திருஒற்றிப் பரமசிவம்’ எனப்பட்டது. இறைவி எங்கும் நிறைந்தவள். மேலும் யார்யார் எந்தெந்த நிலையில் இருக்கின்றனர், என்பதை அறிபவள். ஆதலின், அவளே நினைப்போர் அறிவாய்’ எனப்பட்டது. இறைவ னும் நம்மைப் பற்றித் தன் குறிப்பேட்டில் எழுதி வைக் கின் ருன் என்பதை அப்பர் பாடியுள்ள,

தொழுது தூமலர் துாவித் துதித்துநின்று அழுது காமுற் றரற்றுகின் ருரையும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருவருட்பா-11.pdf/114&oldid=681597" இலிருந்து மீள்விக்கப்பட்டது