பக்கம்:திருவருட்பா-11.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடிவுடை மாணிக்கமாகில 0

பொழுது போக்கிப் புறக்கணிப் பாரையும் எழுதும் கீழ்க்கணக் கின்னம்பர் ஈசனே’

என்னும் திருக்குறுந் தொகைப் பாடலால் தெளிக.

இறைவி நம் அறிவிற்கும் அப்பாலாய் விளங்குபவள் ஆதலின், அறிவாம் வெளிக்கு அப்புறத்து நின்றாய்’ என்றனர். இறைவன் நிலையினப் பேசவந்த மணிமொழி யாரும், அப்பாலேக்கு அப்பாலாய்ப் பாடுதுங்காண் அம்மானே’’ என்று கூறுதலேயும் ஈண்டு நினைவு கொள்க. இறைவி உண்மை அன்புடையவர்களால் அறியப்படுபவளே அன்றிப் பிறரால் அறியப்படாதவள். இந்தக் குறிப்பையே, ‘யார் அறிவார் நின்னே’ என்றனர். ‘ஆர் அறிவார் என்ன அனந்தமறை ஒலம் இடும்’ எனும் தாயுமானுர் திருவாக்கின ஈண்டு நினைவு கூர் க. இங்ஙனம் இருக்க நான் அறிவேன் என்று கூறுதல் அடாது என்னும் கருத்தில்தான் தம் பணிவும் தோன்ற ‘நாயேன் அறிவது அழகுடைத்தே’ என்று நம் ஐயா கூறிஞர். (40)

போற்றிடு வேர்தம் பிழை ஆ பிரமும் பொறுத்தருள்செய் வீற்றாெளிர் ஞான விளக்கே மரகத மென்கரும்பே ஏந்ருெவின் ஒற்றி இடத்தர் இடத்தில் இலங்கும் உயர் மாற்றாெளி ரும்பசும் பொன்னே வடிவுடை மாணிக்கமே.

(யொ - ரை. உன்னே யார் போற்றுகின்றார்களோ அத்தகையவர்களின் குற்றங்கள் ஆயிரம் இருந்தாலும் அவற்றை எல்லாம் பொறுத்துத் திருவருள் செய்கின்ற தனிச் சிறப்புடன் விளங்குகின்ற அறிவு விளக்கமே மரகதமணி போன்ற நிறமுடையாளே! இனிய கரும்பைப் போன்றவளே! இரடப வாகனத்தின்மீது விளங்கும் திருஒற்றிப் பரமனது இடப்பாகத்தே விளங்கும் மாற்றுயர்ந்து ஒளிவிடும் பசும் Qur 3! வடிவுடை மாணிக்கமே “ (எ . து.)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருவருட்பா-11.pdf/115&oldid=681598" இலிருந்து மீள்விக்கப்பட்டது