பக்கம்:திருவருட்பா-11.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 0 3 திருவருட்பா

(1ெ ரை.) திருஒற்றியூரில் வீற்றிருக்கும் நெற்றிக் கண் படைத்த நிமலரைச் சேர்ந்து விளங்கும் வளமான மாலே அணிந்த அழகிய வேல் போன்ற கூர்மையான கண்காேயுடைய மானே வடிவுடை மாணிக்கமே பகைவர் களே வென்று உலகை ஆண்டு மெய்ஞ்ஞானத்தைப் பெற்று: மேலுலகில் சீருடைய நட்சத்திரங்கள் சூழ்ந்துள்ள சந்திர கனப்போல் ஒளியுடன் இருப்பவர்கள், உன் அன்பர்களின் திருவடிகளைக் கண்ட அன்பர்கள் அல்லரோ? “ (எ . து.)

(அ செ1) கண்துதல் - நெற்றிக் கண்ணுடைய சிவபெருமான், துதல் - நெற்றி. வண்தார் - வளமானமாலை. G அன்ன - போன்ற, அண்டார் . பகைவர். விண்ணில் :ேல் உலகில். பண் . சீர்மை. தாரை - நட்சத்திரம். மதி - சந்திரன்.

(இ - கு.) கண்ணுதல், அன்மொழித் தொகை. வண்மை + தாச் - ஐ, பண் + தாரை என்று பிரிக்க பதம், குறுக்கல் விகாரம். கண்டாரை, கண்டவர் இரண்டும் வினேயால் அனேயும் பெயர்கள்.

(வி ரை.) வேல் வெற்றிக்குத் துன்ேயாய் இருத் தலின் அதற்கு மாலே சூட்டிச் சிறப்புச் செய்தல் மரபு ஆதலின், வண் தாரை வேல் ‘ எனப்பட்டது. வேலின் கூர்மை மாதர்களிள் கூரிய பார்வைக்கு உவமையாகக் கூறுவது புலவர் மரபு. ஐ என்பதற்கு அழகு என்று பொருள் காணுது சாரியை என்று கூறினும் அமையும். விண்ணுலகு அடைதற்கு வெற்றி துனே ஆகாது. ஞானமே துணை யாகும். அந்த ஞானமும் மெய்ஞ்ஞானமாக இருக்க வேண்டும். எனவேதான் மெய்ஞ்ஞானம் அடைந்து விண்ணில் இருப்போர்” எனப்பட்டது.

விண்ணில் பல மெய்யன் பர்கள் சூழ்ந்திருப்பர் என்பது நம் ஐயா கூறும் உவமையால் புலனுகிறது. அதாவது பல

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருவருட்பா-11.pdf/118&oldid=681601" இலிருந்து மீள்விக்கப்பட்டது