பக்கம்:திருவருட்பா-11.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

$ i 2 திருவருட்டா

‘ஆதித்தன் அம்புலி அங்கி குபேரன் அமரர்தம்கோன்

போதில் பிரமன் புராரி முராரி பொதியமுனி காதிப் பொருபடைக் கந்தன் கணபதி காமன்முதல் சாதித்த புண் ணியர் எண்ணிலர் போற்றுவர்

(5LGL

என்று குறிப்பிடுதல் காண்க. இந்தக் கருத்தை உளத்தில் கொண்டே அயன் முதலோர் கோடி’ முடி என்றனர்.

அனிச்சமலர் மிக மிக மெல்லியது. அதனை மூக்கருகே கொணரும்போதே அது வாடி விடும். இது குறித்தே திருவள்ளுவர். மோப்பக் குழையும் அனிச்சம்’ என்றனர். இத்தகை அனிச்சமலரினும் மிக மிக மென்மையர் மாதர்கள். இதனேயும் திருவள்ளுவர்,

  • நல் நீரை வாழி அனிச்சமே தின்னினும்

மேல் நீரள் யாம் வீழ் பவள் ‘ என்று கூறினர். மேலும் அவர், மிக மெல்லிய அனிச்சமலரின் காம்பினைக் கிள்ளி எறியாமல் அப்படிய்ே ஒரு பெண்ணின் கூந்தலில் சூட்டினல் அவளுடைய இடை, அனிச்சமலரினு மெல்லிய தாக இருக்கின்றமையின், அவள் இடை முறிந்து விடும் என்றனர். இத்துடன் மட்டும் மாதர்களின் மென்மைத் தன்மையினைத் திருவள்ளுவர் கூறி நிறுத்தாமல், பெண்களின் பாதத்தில் அனிச்சமலர் படின் நெருஞ்சிமுள் போலத் தைக் கும் என்றும் கூறியுள்ளார்.

  • அனிச்சமும் அன்னத்தின் து வியும் மாதர்

அடிக்கு நெருஞ்சிப் பழம் ” என்னும் பாடலைக் காண்க. இத்தகைய பெண் இனத்திற்குத் தாயகமாய் இருப்பவள் இறைவியாதலின், அவளுடைய திருவடிகளை அனிச்சம் பொருமலர்ச் சீறடி’ என்றனர் நம் வள்ளலார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருவருட்பா-11.pdf/122&oldid=681606" இலிருந்து மீள்விக்கப்பட்டது