பக்கம்:திருவருட்பா-11.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடிவுடை மாணிக்கமாலே 1 1 3

இறைவியின் திருவடிகளே வந்து பணியும் தேவர்களின் முடிகளின் தொகையினே உயர்வு நவிற்சி அணியாகக் கோடி என்னும் பேர் எண்ணுல் குறித்தனர். இப்படிக் கூறுதல் புலவர் மரபு. இறைவனே வணங்க வந்தவர்களின் முடிகளே யும் கோடி என்னும் சொல்லால் பரஞ்சோதியாரும் கூறி யுள்ளதை,

‘வந்திறை அடியில் தாழும் வானவர் மகுட கோடி

பந்தியில் மணிகள் சிந்த வேத்திரப் படையால் தாக்கி அந்தியும் பகலும் தொண்டர் அலகிடும் குப்பை ஆக்கும் நந்தினம் பெருமான் பாத நகைமலர் முடிமேல் வைப்பாம்” என்னும் பாட்டால் தெளிக.

இறைவியை அன்பர்கள் வாவா என்று அழைப்பதை இறைவியைப் பற்றிப் பாடப்பட்ட பிள்ளைத் தமிழ் நூல்களில் வரும் வருகைப் பருவப் பாடல்களால் அறிக.

பெருந்தேன் இறைக்கும் நறைக் கூந்தல்

பிடியே வருக முழுஞானப் பெருக்கே வருக பிறைமெளவிப்

பெம்மான் முக்கண் சுடர்க்கிடும் நல் விருந்தே வருக மும்முதற்கும்

வித்தே வருக வித்தின்றி விளைந்த பரமா னந்தத்தின்

விளைவே வருக பழமறையின் குருந்தே வருக அருள் பழுத்த

கொம்பே வருக திருக்கடைக்கண் கொழித்த கருணைப் பெருவெள்ளம்

குடைவார் பிறவிப் பெரும்பிணிக்கோர் மருந்தே வருக பசுங்குதலை

மழலைக் கிளியே வருகவே மலையத் துவசன் பெற்றபெரு

வாழ்வே வருக வருகவே “

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருவருட்பா-11.pdf/123&oldid=681607" இலிருந்து மீள்விக்கப்பட்டது