பக்கம்:திருவருட்பா-11.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடிவுடை மாணிக்கமாலை 1 1 7

சித்தாந்த சார்புடையனவாகவும், வைணவச் சார்புடையன வாகவும் ஏகான்மவாதச் (வேதாந்தம்) சார்புடையனவாக வும் விளங்கும். புராண இதிகாசங்களில் கூறப்படுகின்ற கதைகளுக்கும் உபநிடதங்கள் இடம் தந்துள்ளன.

இவ்வாறெல்லாம் கருத்து வேற்றுமைகட்கும் பிணக்கு களுக்கும் மற்றும் உள்ளனவற்றிற்கும் எல்லா வேதங்களும், உபநிடதங்களும் காரணமாய் இருத்தலின் நம் வள்ளலார் ‘ இட்டு ஆர் மறைக்கும் உபநிடதத்திற்கும் இன்னும் சற்றும் எட்டா நின் பொன் அடி ‘ என்றனர்.

வேதங்களுக்கும், உபநிடதங்களுக்கும் எட்டாத இறை வியின் திருவடிகள் தம் சென்னியில் சூட்டிக் கொள்ளும் வாய்ப்புக் கிட்டுமோ என்னும் ஐயத்தினுல்தான் ‘எட்டா நின் அடிப்போது எளியேன் தலைக்கு எட்டுங்கொலோ’ என்றனர். (46)

வெளியாய் வெளிக்குள் வெறுவெளி யாய்ச்சிவ மேநிறைந்த ஒளியாய் ஒளிக்குள் ஒளியாம் பரை நீனை ஒப்பவர்.ஆர் எளியார்க் கெளியர் திருஒற்றி யார் மெய் இனிதுபசி மனியாதின் ருேங்கும் மருவே வடிவுடை மாணிக்கமே.

(பொ. - ரை.) ‘ ஏழைகளுக்கு ஏழையாகவே விளங்கி அவர்கட்குத் திருவருள் புரியும் திருஒற்றியூர்ப் பரமரின் உடல் இனிது மணக்க உடன் இருந்து மேலும் அம் மணத்தை வீசிக் கொண்டு விளங்கும் தேவி! வடிவுடை மாணிக்கமே ! பரவெளியாய் அப்பர வெளியுள் விளங்கும் ஞானவெளியாய் பரமாகாயமாய் எங்கும் மங்களமே நிறைந்த ஒளியாய், ஒளிக்குள்ளும் அதி நுட்பமான ஒளியாய் விளங்கும் பரமேசு வரியே! உனக்கு ஒப்பானவர் யார் உளர்? ஒருவரும் இலt ’’ (எ - து.)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருவருட்பா-11.pdf/127&oldid=681611" இலிருந்து மீள்விக்கப்பட்டது