பக்கம்:திருவருட்பா-11.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

.

திருச்சிற்றம்பலம்

வடிவுடை மாணிக்கமாலை

தோற்றுவாய்

பூந்தமிழ் மொழியில் தொண்ணுாற்றாறு வகையான பிரபந்தங்கள் பொலிவுற்று விளங்குகின்றன. அவையே, பிள்ளைத்தமிழ், கலம்பகம், அந்தாதி, கோவை, உலா, தூது, பரணி, மாலே, தசாங்கம், சதகம் முதலியன. இவ்வாறு பாடப்படும் நூல்களுக்குரிய இலக்கண விதிகளைப் பாட்டியல் என்னும் நூலில் பரக்கக் காணலாம். ஒல்காப் பெருமை வாய்ந்த தொல்காப்பியத்தில் இத்தகைய பிரபந்தங்கட்குரிய இலக்கணங்கள் வெளிப்படையாகக் கூறப்படவில்லை என்றா லும், குறிப்பினுல் இப்பிரபந்தங்கட்குரிய இலக்கணமும் தொல்காப்பியத்தில் உண்டு என்று கூறலாம்.

‘ஊரொடு தோற்றமும் உரித்தென மொழிப’ என்னும் தொல்காப்பிய நூற்பா உலாப் பிரபந்தத்திற்குரிய இலக்க ணத்தை உணர்த்தும் முறையில் அமைந்துளது என்பதை, உச்சிமேற் புல்வர்கொள் நச்சிகுர்க்கினியர், ‘அது பின்னுள் ளோர் ஏழு பருவமாகப் பகுத்துக் கலிவெண் பாட்டாகக் செய்கின்ற உலாச் செய்யுளாம்” என்று விளக்குவதால் அறியவருகிறது. இவ்வாறே, குழவி மருங்கினும் கிழவ தாகும்” என்னும் தொல்காப்பிய நூற்பாவிற்கு நச்சிஞர்க் கினியர் விளக்கம் தரும்போது ‘ஒரு திங்களில் குழவியைப் பற்றிக் கடவுள் காக்க’ என்று கூறுதலானும், “பாராட்டுமிடத் துச் செங்கீரையும், தாலும், சப்பாணியும், முத்தமும், வரவுரைத்தலும், அம்புலியும், சிற்றிலும் சிறுதேரும், சிறு பறையும் எனப் பெயரிட்டு வழங்குதலானும் என்பது’ என்று:

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருவருட்பா-11.pdf/13&oldid=681614" இலிருந்து மீள்விக்கப்பட்டது