பக்கம்:திருவருட்பா-11.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2) திருவருட்பா

காலத்திலும் வணங்காத சந்திரனே அணிந்த முடியுடைய எங்கள் பெருமானும், திருஒற்றியூர்த் தியாகனும் ஆகிய சிவன் உன் நற்குணத்தை விரும்பித் தன் உடம்பில் நீ சரி பாதியாக இருக்க என்று இடப்பாகத்தைத் தந்தான் என்று பலர் கூறுவர். ஆனல் அச்சிவபெருமான் உன் பரிமளத்தை என்றும் நுகர்ந்து கொண்டிருக்கவே தன் உடலில் பாதி ஈந்தான் என்பதை அவர்கள் அறிந்திலச் ‘ (ா -து.)

(அ - சொ.) விண் - உயர்ச்சி. அம் - அழகு. காதல் - இறைவனிடம் காட்டும் அன்பு. புலவி - ஊடல். மதி . சந்திரன். வானன் . வாழ்பவனை சிவபெருமான். மெய் - உடம்பு. கூறு - ஒரு பகுதி. மணங் . பரிமளம்.

(இ - கு.) விண் + அம் எனப் பிரிக்க, அம், சாரியை. அன்றி, குறிப்பு வினே எச்சம். வாழ்நன் என்பது வாணன் என்றாயது மரூஉ வழக்கு, மெய்க்கூறு ஏழன் தொகை. காதலித்தது, தொழிற்பெயர். விணம் என்பது விண்ணம் எனப்புணரவேண்டியது எதுகை நோக்கித் தொகுத்தல் விகாரம் பற்றி ஒற்று இரட்டிக்காமல் நின்றது.

(வி ரை.) இறைவன் தன்னைப் பிறர் வணங்கும் திலையினனே அன்றித் தான் பிறரை வணங்கும் தன்மையன் அல்லன். இது குறித்தே திருவாதவூரர் சேர்ந்தறியாக் கையான்’ என்றனர். அப்படி இருந்தும் அவன் வணங்கும் இடங்கள் இரண்டு. ஒன்று. அன்பர்கள் முன்பு வணங்குவது. மற்றென்று இறைவியின் ஊடல் தீர்க்க வணங்குவது. எத்தகைய அன்பர்களின் முன்பு வணங்குவன் எனில் உயர்ந்த உள்ள மும், கள்ளம் கபடு அற்ற பண்புமுடைய அன்பர்கள் முன்புதான் வணங்குவன். இது குறித்தே நம் ஐயா மிக்க விழிப்புடன் விண் அம் காதன் அன்பர்க்கும் அன்றி வனங்கா மதிமுடி எங்கள் பிரான் ‘ என்றனர். இறைவர் அன்பர்க்கு வணங்கியதை ஒரு வரலாற்றால் உணரலாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருவருட்பா-11.pdf/130&oldid=681615" இலிருந்து மீள்விக்கப்பட்டது