பக்கம்:திருவருட்பா-11.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடிவுடை மாணிக்க மாலை $ 2 #

வேலூருக்கு அருகில் விரிஞ்சிபுரம் என்னும் தலம் ஒன்று உளது. அந்தத் தலத்தின் இறைவரை அர்ச்சிக்கும் அர்ச்சகர் அடுத்த நாள் வந்து விடலாம் என்ற நோக்கத் துடன் வெளியூர்க்குச் சென்றனர். ஆணுல் அவர் தினத்தபடி வந்தில்ர். ஆகவே அர்ச்சகரின் வாழ்க்கைத் துணைவியார் தம் மகனே இறைவனுக்குத் திருமுழுக்காட்டிப் பூசை புரிந்து வருமாறு அனுப்பினுள் சிறுவன் தன் தாயின் கட்டளேப்படி உயர்ந்த உள்ளத்துடனும், உள்ளத்தில் கள்ளம் கட்டு இல்லாத பண்புடனும் புறப்பட்டு வந்தான். வந்தவன் சிவலிங்கத்தைக் கண்டான். இறைவர்க்கு முழுக்காட்ட (அபிஷேகம் செய்ய) குடத்தில் நீர் கொண்டு வந்தான். ஆணுல் சிவலிங்கம் தன் அளவுக்கும் நீண்டு உயர்ந்து காணப்பட்டதனுல், எப்படிச் சிவலிங்கத் தின் உச்சியில் நீரைப் பொழிவது என்று சிந்தித்தவண்ணம் திகைத்து நின்றன். இறைவர் எளியவர்க்கு எளியவர் ஆதலின் தம் வணங்காச் சென்னியைச் சிறுவனுக்காக வணங்கித் தலே சாய்த்து நின்றார், அதன் பிறகு சிறுவன் முழுக்காட்டி மகிழ்ந்து பூசனே செய்து முடித்தான். இன்றும் இறைவர் தம் திருமுடி சாய்த்து விளங்கும் கோலத்தை விரிஞ்சிபுர ஆலயத்தில் கரு அறையில் (மூலட்டானத்தில்) காணலாம். இதனை உளத்தில் கொண்டார்போல தம் ஐயா எதிர்மறை முகத்தால் விணங்காதல் அன்பர்தம் அன்பிற்கு அன்றி வணங்கா மதிமுடி எங்கள் பிரான்’ என்றனர்.

இதனை ஒரு புலவர் வேறு ஒரு கற்பனே நயம் தோன்ற ஒரு பாடலை அழகுறப் பாடியுள்ளனர். அப்பாடல்,

‘மாசிலாத் தென்விரிஞ்சை மார்க்கச காயலிங்கர் வேசியர்பால் தூதுசென்று மீண்டனர்காண் அம்மானை வேசியர் பால் துtதுசொல்லி மீண்டனரே யாமாயின் விசைமுனை வெட்கம் அவர்க்கிலேயே அம்மானே இல்லாமல் தலைஇறக்கம் ஏன் வந்த தம்மானே'

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருவருட்பா-11.pdf/131&oldid=681616" இலிருந்து மீள்விக்கப்பட்டது