பக்கம்:திருவருட்பா-11.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

 22 திருவருட்பா

என்பது. இப்பாட்டில் சிறுவனுக்காக இறைவர் தலைசாய்த் தனர் என்பதைக் கூருமல், (சிறுவனுக்காகத் தலை சாய்த்தது தான் உண்மை) சுந்தரர் பொருட்டு ஒரு தாசி (பரவை நாச்சியார்) வீட்டிற்குத் தூது போனதால் மானம் போயிற்று என்ற காரணத்தால் தலே இறக்கம் கொண்டனர் என்று கூறப்பட்டுளது.

தமிழர் வாழ்க்கையில் தலைவன் தலைவிக்கு ஊடல் (சிறு பிணக்கு) உண்டாகும் என்று இலக்கண நூல்கள் கூறுகின்றன. இவ்வூடலுக்குப் பல காரணங்கள் இருப்பினும் அவற்றுள் ஒன்று, தன் தலைவன் தன்னேவிட்டு வேறு ஒருத்தியுடன் வாழ்வதனால் உண்டாவதாகும். இந்த இண்டலத் தீர்ப்பதற்குத் தலைவன், தலைவி காலில் வீழ்ந்து தன் குற்றத்தை மன்னிக்க வேண்டுவன்.

இந்த ஊடலும், வணக்கமும் பிறர் அறியா நிலையில் சிறிது பொழுதே நிகழும். ஊடலே நீட்டிக்கக் கூடாது என்றே வள்ளுவர் ஓர் உவமை வாயிலாகக் கூறியுள்ளார். அதாவது * உப்பு உணவில் பதமாக இருத்தல் போல Eடலும் பதமாக அமைய வேண்டும். அப்படிக்கின்றி ஊடல நீட்டித்தால் உப்பு மிகுதியும் கொண்ட உணவு சுவை கெட்டுப்போவது போலக் காதல் சுவை தோன் ருது கெட்டுவிடும்’ என்பதாம். இதனே,

‘உப்பமைந் தற்றால் புல வி அதுசிறிது மிக்கற்றால் நீள விடல்’ என்னும் குறளில் காண்க. புலவி தேவை என்பதையும் திருவள்ளுவர் கூருமல் இல்லை. அதனே,

‘துணியும் புலவியும் இல்லாயின் காமம் கனியும் கருக்காயும் அற்று’ என்னும் குறளில் விளக்கினர். இன்னுேரன்ன காரணங் களால் மாதர்கள் ஊடல் கொள்ளுதல் உண்டு என்பதை உணர்ந்தோம். இந்த ஊடலைப் போக்கத் தலைவன் தலைவியின்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருவருட்பா-11.pdf/132&oldid=681618" இலிருந்து மீள்விக்கப்பட்டது