பக்கம்:திருவருட்பா-11.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடிவுடை மாணிக்க மாலை 1 2 3

கால்களில் வீழ்ந்து வணங்குவதால் தலைவி உயர்ந்துவிடு கின்றாள். தலைவன் தாழ்ந்து விடுகின்றன். இந்த உண்மை யிஜனத் தொல்காப்பியம்,

‘மனைவி உயர்வும் கிழவோன் பணிவும் நினையும் காலப் புலவியுள் உரிய’ என்று கூறுகிறது. இதனை நளன் வாழ்க்கையில் வைத்துக் காட்டலாம். நளன் தன் மனேயாளாம் தமயந்தியை நோக்கி ஒரு சோலையைக் காட்டி இச் சோலேயில் தான் நாங்கள் விளையாடுவது என்று கூறினன், அதனைக் கேட்ட தமயந்தி நாங்கள் என்ற சொல்லுக்குப் பெண்களையும் உடன் சேர்த்துச் சொல்லப்புட்டது என்று உளம் கொண்டு தன்னைத் தவிரப் பல மாதர்கள் நளனுக்கு உண்டு போலும் என்று எண்ணி ஊடல் கொண்டனள். அந்த ஊடலைத் தீர்க்க நளன் உடனே தன்னை மன்னிக்க வேண்டி அவள் காலில் வீழ்ந்து வணங்கினன். இதனை நளவெண்பா,

  • சில்லரிக் கிண்கிணிமென் தெய்வமலர்ச் சிற்றடியைத்

தொல்லே மணிமுடிமேல் சூட்டினன் ‘ என்று கூறுகிறது.

இவ்வாருண மக்கள் நிகழ்ச்சிகளையும் இறைவன் மீது ஏற்றி இறைவன் இறைவியை ஊடல் தீர்க்கும் பொருட்டு வணங்கினன் என்று புலவர்கள் கற்பனை செய்து பாடுவார் ஆயினர். இறைவன் வணங்குவதனுல் இறைவிக்கும் மகிழ்ச்சி உண்டாகுமாம்.

பொழியும் தரங்கக் கங்கை விரைப்

புனல்கால் பாய்க்கத் தழைந்துவிரி புவனம் தனிபூத் தருள் பழுத்த

பொன்னம் கொடி :

என்று பாடுவர் குமரகுருபரர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருவருட்பா-11.pdf/133&oldid=681620" இலிருந்து மீள்விக்கப்பட்டது