பக்கம்:திருவருட்பா-11.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடிவுடை மாணிக்கமாலே 125

கின் ருள் என்பதற்கு மகிழ்ந்தாளாம். இந்தக் கருத்தில் தான் பிரபுலிங்கலீலையில் அம்பிகையை வணங்கும் பாடல் வருகிறது. அப்பாடல்,

ஆதி பகவன் தனது டல்

தணிப்பான் பணிய அவ்விறைவன் பாதம் இறைஞ்சும் அதற்கும்நெற்றிப்

பகையும் அங்குல் பகையுமாம் சீத மதியும் அரவும்விழும்

செயற்கும் உவகை செயாமல் அலே மாது பணியும் அதற்குமனம்

மகிழும் உமையை வணங்குவாம் : என்பது.

இவ்வாறெல்லாம் இறைவன் இறைவியை வணங்கிய வணக்கத்தை உளத்தில் கொண்டே நம் ஐயா நின்புல விக்கும் அன்றி வணங்கா மதிமுடி எங்கள் பிரான்’ என்றனர். இந்தத்தொடரும் கருத்தும் மங்களாம்பிகை பிள்ளைத் தமிழில்,

செஞ்செடைக் கருமிடற் றுத்தவள

நீற்றுத் திருப்பெரும் பரமயோகி வாங்கும் திரைக்கடல் புடவிமுதல்

எத்தவமும் வாழ்வெனும் புணரிமூழ்க வணங்கா முடித்தல் வணங்கிட ‘ என்று வருதல் காண்க.

இறைவன் இறைவியின் குணத்தினே நன்கு அறிந்து தான் அவளே மணந்து தன் உடலில் பாதி ஈந்தான் என்பது புராண வரலாறு. சுந்தரமூர்த்தி சுவாமிகளும்.

குரும்பைமுலே மலர்க்குழலி கொண்டதவம் கண்டு

குறிப்பிளுெடும் சென்றவள்தன் குணத்தினை நன்கறிந்து விரும்பும்வரம் கொடுத்தவளே வேட்டருளிச் செய்த

விண்ணவர்கோன் கண்ணுதலோன் ‘

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருவருட்பா-11.pdf/135&oldid=681622" இலிருந்து மீள்விக்கப்பட்டது