பக்கம்:திருவருட்பா-11.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடிவுடை மாணிக்கமா8ல 2

வாழ்வே எனப்பட்டாள். அண்டங்கள் பற்பல ஆகும். இதனைத் திருவாசகம்.

அண்டப் பகுதியின் உண்டைப் பிறக்கம் அளப்பரும் தன்மை வளப்பெரும் காட்சி ஒன்றனக் கொன்று நின்றெழில் பகரின் நூற்றுக் கோடியின் மேற்பட விரிந்தன ‘ என்று கூறுதல் காண்க. எனவேதான் ‘பன்னும் பல்வேறு அண்டம்’ எனப்பட்டது. மக்கள், தேவர், விலங்கு, பறவை, கீர் வாழ்வன், ஊர்வன முதலியன சரப்பொருள்கள். அசரம் என்பன மரம், செடி, கொடி, புல், பூண்டு, மலை முதலியன. இவை அனைத்தையும். ஈன்றவள் இறைவியே, அப்படி இருந்தும் அவள் முதுமை உருமல் இளேயளாகவே விளங்கு கின்றாள். அவளது இத்தகைய நிலயினே அறிந்தே வேதங்களும் ஏனைய நூல்களும் அவளைக் கன்னி என்றே போற்றுகின்றன. அகிலாண்ட கோடி ஈன்ற அன்னையே பின்னேயும் கன்னி எண்மறை பேசும் ஆனந்த ருப மயிலே’ என்று தாயுமானவர் பாடுவர். ‘கருதரிய கடலாடை உலகு பல அண்டம் கருப்பமாய்ப் பெற்ற கன்னி’ என்று போற்றுவர் சிவப்பிரகாச சுவாமிகள். இவற்றை உட்கொண்டே நம் ஐயா :சராசரம் யாவையும் ஈன்று அது சூழ்ந்தும் உன்னே இன்னும் இளந்தை அழியாத கன்னிகை என்பது என்னே என்று வியந்து பாடினர். (49)

சினம்கடந் தேர்உள்ளச் செந்தா மரையில் செழித்துமற்றை மனம்கடந் தோதும்அவ் வாக்கும் கடந்த மறைஅன்னமே தினம்கடத் தோர்புகழ் ஒற்றிஎம் மான் இடம் சேர்அமுதே வனம்கடந் தோன்புகழ் மானே வடிவுடை மாணிக்கமே.

(பொ ரை.) கோபத்தை ஒழித்தவர்களின் மனமாகிய செந்தாமரையில் செழிப்புடன் விளங்கி, மனத்திற்கும்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருவருட்பா-11.pdf/137&oldid=681624" இலிருந்து மீள்விக்கப்பட்டது