பக்கம்:திருவருட்பா-11.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடிவுடை மாணிக்கமாலை 25

இந்தக் கோபத்தை நாம் தடுக்கா விட்டால் அது தம்மையே அழித்துவிடும். ஆகவே, ஒருவன் தன்னக் காத்துக்கொள்ள வேண்டுமானுல் கோபம் வர ஒட்டாமல் காத்துக்கொள்ள வேண்டும். இதனேயும் திருவள்ளுவர்,

தன்னைத்தான் காக்கின் சினம்காக்க காவாக்கால்

தன்னையே கொல்லும் சினம்’

என்று அறிவுறுத்தி யுள்ளனர். இக் கோபம் சினம் கொண்ட வரை மட்டும் அழிக்காமல், இக் கோபம் கொண்டவர்களின் இனத்தாரையும் அழிக்கும். எனில், அதன் கொடுமையினே என் என்று கூறுவது ?

  • சினம்என்னும் சேர்ந்தாரைக் கொல்லி இனம்என்னும்

ஏமப் புணையைச் சுடும் ’’ என்பது, பொய்யாமொழியாரின் பெர்ருள் உரை. இக் கருத்தினை நன்கு விளக்கும் முறையில் கம்பர்,

மூங்கிலில் பிறந்த முழங்குதி மூங்கில் முதலற முறுக்குமா போலத் தாங்கரும் சினத்தீ தன்உளே பிறந்து

தன் உறு கிளேயெலாம் தகிக்கும் ‘

என்றனர். இவ்வாறெல்லாம் கொடுமைக்கு உறைவிடமான சினத்தை உள்ளத்தாலும் நினைக்காமல் எவன் வாழ்கிருளுே அவன் தினேக்கும் யாவற்றையும் பெறுவன். இந்த உண் மைகளே உணர்ந்தவர்கள் சினத்தை ஒழித்து இறைவன் இறைவியர் திருவருள் பெற்று அம்மை அப்பர் தம் உள்ளத்தில் வீற்றிருக்கும் பேற்றைப் பெறுவர் என்பதை நன்கு உணர்த்தவே நம் ஐயா சினங்கடந்தோர் உள்ளார். செந்தாமரையில் செழித்து ‘ என்று உணர்த்தியுள்ளனர்.

இறைவனும் இறைவியும் ஒவ்வோர் உயிரின் உள்ளத்தில் குடியாக இருந்தும் ஒளித்து இருக்கின்றனர்.

8

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருவருட்பா-11.pdf/139&oldid=681626" இலிருந்து மீள்விக்கப்பட்டது