பக்கம்:திருவருட்பா-11.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

$ 30 திருவருட்பா

இதனை உள்ளத்திருந்தும் ஒளித்தான்பரன்” என்று கூறுதல் காண்க, இறைவன் தன்மையே இறைவியின் தன்மை பாதலின் மனம் கடந்து ‘ எனப்பட்டாள். இவ்வாறே பெருமைகளே வாக்கினுல் எவ்வளவு கூறிஞலும் அவ்வாக்குக்கு அப்பாற்பட்டவளாக இறைவி விளங்கு Listr. “ மாற்றம் மனம்கழிய நின்ற மறையோனே ‘ என்னும் திருவாசக வரியை ஈண்டு நினைவு கூர்க. இது குறித்தே நம் ஐயாவும், மனம்கடந்து ஒதும் அவ்வாக்கும் கடந்த மறை அன்னமே என்றனர். இவ்வாறு இறைவனும் இறைவியும் நம் மனம் வாக்கிற்கு அப்பாற்பட்டிருந்தால் அவர் களின் திருவருளேப் பெறுவதுதான் எப்படியோ ?’ என்னும் ஐயம் எழலாம். இந்த ஐயத்தைப் போக்கவே மணிமொழி யாரும், வாகீசரும் முறையே, அவன் அருளாலே அவன் தாள் வணங்கி ‘ என்றும், அவன் அருளே கண்ணுகக் காணின் அல்லால் இப்படியன் இந்நிறத்தன் இவ்வண்ணத் தன் இவன் இறைவன் என்றெழுதிக் காட்டொனதே ‘ என்றும் கூறிச் சென்றனர்.

தினம் கடந்தோர் என் பார் வீண் நாட்கனேக் கடந்து இறைவனே வணங்கல், வாழ்த்தல், வழிபடல் ஆகிய நல் நாட்களில் தம் வாழ்நாட்களைப் பயன் ஆடுத்திய நல் அறிஞர்கள் ஆவார்.

கைகேயி தன் மகளுன பரதனுக்கு அரசைப் பெற்றுத் தரும் பொருட்டு இராமனேக் காட்டுக்குப் போகப் பணித் தாள். இராமனும் அக்கட்டளையைத் தலைமேல் தாங்கிக் காடுகளைக் கடந்து சென்றன். இதனேக் கம்பர் குறிப்பிடும் போது,

மன்னவன் பணி அன் ருகில் தும்பணி மறுப்ப ைேஎன் பின்னவன் பெற்ற செல்வம் அடியனேன் பெற்ற தன்றாே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருவருட்பா-11.pdf/140&oldid=681628" இலிருந்து மீள்விக்கப்பட்டது