பக்கம்:திருவருட்பா-11.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடிவுடை மாணிக்கமாலே 1 33

(இ கு.) மல்லல் என்பது, மல் என ஈறு குறைந்து நின்றது.

(வி ரை.) நல்லாய் என்பதற்கு நல்லவனே என்று பொருள் கூறினும் கூறலாம். அன்றிப் பெண்ணே என்று பொருள் காணினும் காணலாம். நல்லசர் என்பது பெண் களேக் குறிக்கும் சொல்லும் ஆகும். மனிதர்களேத் தனியே பிரித்து வல்லாரையும், வல்லவர் அல்லாரையும் கூறலின் ஈண்டுத் தேவர்களேயும் அரக்கர்களேயும் கொள்ளலாம். ‘ அவன் அன்றி ஒர் அனுவும் அசையாது’ என்பது ஒரு பழமொழி. இறைவி அவனின்று வேறு அல்லள். ஆதலின் அக்கருத்தில் இறைவியின் செயல் இன்றி எவராலும் எதை யும் செய்ய இயலாது என்பதை நம் ஐயா இப்பாடலில் வலியுறுத்தி யுள்ளனர். தேவர்களும் அரக்கர்களும் மற்றைய மனிதர்களும் இறைவியின் திருவருள் செயலைப் பெருது ஒன்றும் செய்ய இயலாமல் இருக்கையில், தாம் அத்திருவருள் செயலைப் பெருத நிலையில் தவறுகள் பல செய்தால், அத் தவறுகள் தவறு. என்று எப்படிக் கருதப்படும் என்பது நம் ஐயாவின் விகு. ஆகவே நன்மைக்கும் தீமைக்கும் இறை வியே காரணமாய் இருக்கத் தவறு தம்முடையது அன்று என்பதைக் கூருமல் கூறியுன்ளனர் நம் வள்ளலார். (51)

எழுதா எழில் உயிர்ச் சித்திர மேஇன் இசைப் பயனே தொழுதாடும் அன்பர்தம் உள்களிப் பேசித் சுகக்கடலே செழுவர் மலர்ப்பொழில் ஒற்றிஎம் மான்தன் திருத்துண்யே வழுவர் மறையின் பொருளே வடிவுடை மாணிக்கமே.

(யொ ரை.) எழுத இயலாத அழகுவாய்ந்த உயிருடன் கூடிய சித்திரமே ! இனிய இசையின் பயனுய் இருப்பவளே! வணங்கி ஆனந்தத்தால் ஆடுகின்ற அன் பர்களின் உள்ளத்தில் இருந்துகொண்டு மகிழ்ச்சியைத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருவருட்பா-11.pdf/143&oldid=681631" இலிருந்து மீள்விக்கப்பட்டது