பக்கம்:திருவருட்பா-11.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

# 34 திருவருட்பா

தருபவளே! உண்மை இன்பம் நிறைந்த கடலே! வளமானது நிறைந்த மலர்கள் மலர்ந்துள்ள சோலைகள் சூழ்ந்த திரு ஒற்றியூரில் வீற்றிருக்கின்ற எம்பெருமானுடைய சிறந்த வாழ்க்கைத் துணைவியே! குற்றம் அற்ற வேதத்தின் பொரு ளாய் இருப்பவளே! வடிவுடை மாணிக்கமே ! (எ . து )

(அ - சோ.) எழில் - அழகு. சித் உண்மை. செழு வார் - வளப்பம் நிறைந்த மறை - வேதம். துணே - வாழ்க்கைத் துனேவி.

(இ கு.) சித்சுகம், உம்மைத்தொகை. செழுமை + ஆர் எனப் பிரிக்க,

(வி . ரை. இப்பாடலில் இறைவி பலவாருக விளிக்கப் பட்டுள்ளாள். இறைவி பேரழகினள் ஆதலின் அவள் அழகை எழுத இயலாமல் போகிறது. ‘’ ஒவியத்து எழுத ஒண்ணு உருவத்தாய் ‘ என்பர் கம்பர். சித்திரத்திற்கு அழகிய உருவப்பொலிவு இருக்கும். ஆணுல் உயிர் மட்டும் இருக்காது. இறைவியும் சித்திரம்போலப் பேர் அழகுடன் இருந்து கொண்டு உயிருடன் திகழ்தலின் ‘உயிர்ச்சித் திர மே” எனப்பட்டாள். குமரருருபரர் அழகொழுக எழுதிப் பார்த்திருக்கும் உயிர் ஓவியமே ‘ என்பர். இறைவன் எப்படி ஏழிசையாய் இசைப்பயனுய் இருக்கின்றானே, அதே போல இறைவியும் இசைப்பயனுய் இருக்கின்றாள். இவளே இசை வடிவினள் என்பதை அபிராமி அந்தாதி, ‘'நரம்பை அடுத்த இசைவடிவாய் நின்ற நாயகியே’’ என்று போற்றுகிறது. எனவேதான் இன் இசைப் பயனே ‘ எனப் பட்டாள்.

அன்பர்கள் இறைவனைத் தொழும்போது ஆனந்த வயத்தராய் ஆடிப்பாடித் துதிப்பர். இதனை மணிமொழியர், * தொழுகையர் அழுகையர் துவள்கையர் ஒருபால் ‘ என்று

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருவருட்பா-11.pdf/144&oldid=681632" இலிருந்து மீள்விக்கப்பட்டது