பக்கம்:திருவருட்பா-11.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடிவுடை மாணிக்கமாலை 1 37.

அல்லவோ? வேல் கொடுத்தாய் திருச்செந்தி வேலவர்க்கு” என்று பொற்களந்தைப் படிக்காசுத் தம்பிரான் பாடி இருப்ப தாலும், கருதரிய கடலாடை உலகுயல் அண்டம் கருப்ப மாய்ப் பெற்ற கன்னி கணபதியை அருகழைத்து அகம் மகிழ்வு கொண்டனள்’ என்று சிவப்பிரகாச சுவாமிகளும் பாடி இருத்தல் கொண்டு இவ்வுண்மையினேக் காண்க. எனவே தான் ஐங்கைச் செவ்வர்க்கும் நல் இளம் சேய்க்கும் மகிழ்ந்து அருள்பால் அளிக்கும் தனத்தனமே” என்றனர். இறைவி இறைவனே மயல் செய்கின்றனள் என்பதைக் குமரி குருபரர், அழகிய சொக்கற்கு மால் செயத் தோட்டிகல. அமர் செய் கயல் கண் குமரி’ என்று அறிவித்துள்ளனர். எனவேதான் நம் ஐயா, எந்தை உள்ளம் மருள்பால் பயிலும் மயிலே’ என்றனர்.

விநாயகர்க்கோ முருகப் பெருமானுக்கோ பால் கொடுத்திலள். அவள் உண்ணுமுலேயாள். என்றாலும், அரு ளாளர்களால் பால் கொடுத்தவள் என்று கூறுதல் உபசார வழக்கே அன்றி உண்மை அன்று. (58)

அயிலேந்தும் பிள்ளை நல் தாயே திருவொற்றி ஐயர் மலர்க் கயிலேந் தரும்பெறல் முத்தே இசையில் கனிந்தகுரல் குயிலே குயின்மென் குழல்பிடி யேமலைக் கோன்பயந்த மயிலே மதிமுக மனே வடிவுடை மாணிக்கமே.

(பொ. - ரை.) கையில் வேலைத் தாங்கும் பிள்ளேயாகிய முருகப் பெருமானின் நல்ல தாயே திருஒற்றியூர்ப் பெரு மானின் மலர்போன்ற கையில் ஏந்தும் பெறுதற்கரிய முத்தே! இசையில் பயிற்சி மிக்க குரல் அமைந்த குயிலே! மேகத்தைப் போன்ற மென்மையான கூந்தலையுடைய பெண் யானை, போன்றவளே! மலே அரசன் பெற்றெடுத்த மயிலே சந்திரனைப் போன்ற முகம் படைத்த மானே! வடிவுடை மாணிக்கமே! “ ( - து.)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருவருட்பா-11.pdf/147&oldid=681635" இலிருந்து மீள்விக்கப்பட்டது