பக்கம்:திருவருட்பா-11.pdf/148

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38 திருவருட்யா

(அ - செ.) அயில் - வேல். பிள்ளை - முருகளுகிய குழந்தை. குயின் - மேகம். குழல் - கூந்தல். பிடி - பெண் யானே. கோன் - அரசன். மதி - சத்திரன். பயந்த - பெற்ற.

(இ - கு.) கயில், மொழிமுதல் போலி. பிடி, உவம ஆகுபெயர். மதிமுகம், உவமத் தொகை.

(வி - ரை.) சோமாஸ்கந்த மூர்த்தப் பெருமான அலங் கரித்து வீதி உலா நடத்தும்போது இறைவியை இறைவன் கையில் ஏந்திக் கொண்டிருப்பது போல அலங்கரிப்பது உண்டு. ஆதலின், ஒற்றி ஐயர் மலர் க்கையில் ஏந்து அரும் பெரும் முத்தே’ எனப்பட்டனள். இறைவி பல்வேறு மொழி களால் விளிக்கப்பட்டிருப்பதைக் காண்க. பெண்களின் நடைக்குப் பெண் யானையை உவமை கூறுதல் புலவர் மரபு. ஆதலின் பிடியே ’’ எனப்பட்டாள். (54)

செய்யகம் ஓங்கும் திருவொற்றி ஊரில் சிவபெருமான் மெய்யகம் ஒங்கும்.நல் அன்பேதின் பால்அன்பு மேவுகின்மூேர் கையகம் ஒங்கும் கனியே தனிமெய்க் கதிநெறியே வையகம் ஓங்கும் மருந்தே வடிவுடை மாணிக்கமே.

(யொ - ;ை.) விளை நிலங்கள் பெருகி விளங்கும் திருஒற்றியூரில் வீற்றிருக்கும் சிவபெருமான் திருமேனியில் விளங்கும் அன்பே உன்னிடம் அன்பு கொள்வோர் கையில் விளங்கும் கனியே! ஒப்பற்ற சத்தியமான நற்கதி அடைதற்கு நன்னெறியாய் விளங்குபவளே! உலகில் சிறந்து விளங்கும் மருந்தே வடிவுடை மாணிக்கமே ‘ (எ . து.)

(அ - சொ.) செய் - வயல். மெய் உடல். தனி - ஒப்பற்ற, நெறி நல்வழி. வையகம் - உலகம், அகம் -

இடம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருவருட்பா-11.pdf/148&oldid=681636" இலிருந்து மீள்விக்கப்பட்டது