பக்கம்:திருவருட்பா-11.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடிவுடை மாணிக்கமாலே # 4 of

பெற்று நீரில் புகும். அது போல இறைவியின் திருக்கண் களும் ஆன்ம கோடிகளேத் தன் திருக்கண் பார்வையால் அருளுடன் பார்க்கும்போது அவை உய்வு பெற்று இனிது வாழ்தலின், சேல் கண்ணுள் எனக் கூறப்பட்டாள். தேன் உடல் நோயை நீக்கும். அதுபோல இறைவி உயிர்க்குரிய நோயாகிய மும்மலங்களே நீக்கி நல்வாழ்வு அளிக்கும். ஆகவே, தேன் எனப்பட்டாள். பல மொழிகளால் இறைவி விளிக்கப் பட்டிருப்பதைக் காண்க. 5 7)

சம்பால் அருள்வைத் தெழில்ஒற்றி ஊக்கொண் டிருக்கும்.இறைச் செம்பால் கலந்தபைத் தேனே கதலிச் செழுங்கனியே வெம்பாலே நெஞ்சர் உள் மேவா மலர்ப்பத மென்கொடியே வம்பால் அணிமுலை மானே வடிவுடை மாணிக்கமே.

(பொ. ரை.) எம்மிடம் திருவருள் சுரந்து அழகிய திருஒற்றியூர்த் தலத்தை இடமாகக் கொண்டு விளங்கும் இறைவனது திருமேனியின் சரி பாதி இடத்தில் கலந்து விளங்கும் புத்தம் புதிய தேனே வளமான வாழைக் கனியே! கொடிய பாலே நிலம் போன்ற அவ்வளவு கொடுமை நிறைந்தவர்களின் மனத்தில் பொருந்தாத தாமரை மலர் போன்ற திருவடிகளேக் கொண்ட பூங்கொடியே கச்சினுல் இறுக்கிக் கட்டப்பட்ட அழகிய முலைகளையுடைய மானே ! வடிவுடை மாணிக்கமே !’ (எ . து.)

(அ - செ.) எம்பால் எங்களிடம். எழில் - அழகிய, இறை சிவபெருமான். செம்பால் . நேர் பாதி. கதலி - வாழை, பால் - பாதி, வெம்பாலே - கொடிய பாலே நிலம். மேவா பொருந்தாத வம்பு - கச்சு, அணி , அழகு,

(இ.கு.) எம்பால், பால் ஏழன் உருபு. எம்-பால் : செம்மை + பால் ; பசுமை + தேனே, செழுமை + கனியே.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருவருட்பா-11.pdf/151&oldid=681640" இலிருந்து மீள்விக்கப்பட்டது