பக்கம்:திருவருட்பா-11.pdf/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடிவுடை மாணிக்க மாலே 49

வேள்வியைச் செய்தனர். அதிலிருந்து பாம்புகள் தோன்றின. அவற்றை இறைவன் மீது ஏவி இறைவனே அழிக்கத் தூண்டினர். இறைவர் முனிவர்களின் அறியாமைக்கு இரக்கம் கொண்டு, அவர்கள் ஏவிய பாம்புகளே நகைகளாகத் தம்மீது அணிந்து கொண்டனர். இதனேக் கத்த புராணம்:

‘ஏந்திய பின்னர் வேள்வி எரி அதற் கிடையே எண்ணில் பாந்தளங் கொழுந்து தீயோர் பணியிஞல் சீற்றம் கொண்டு போந்தன. அவற்றை மாயோன் புள்ளினுக் கஞ்சித் தன்பால் சேர்ந்ததோர் பணிகளோடு செவ்விதில் புனேந்தான்

‘எங்கோன்’

என்று கூறுகிறது. இதனையே நம் ஐயா, பாம்பணி ஒற்றி எம் மான்’ என்றனர். இறைவி மரகதவல்லி ஆதலின், ‘பச்சைக்கொடியே’ எனப்பட்டாள். (6 : )

கருவே தன அற என்நெஞ் சகத்தில் களிப்போ டொற்றிக் குகுவே எனும் நீன் கணவனும் நீயும் குலவும்.அந்தத் திருவே அருள்செந் திருவே முதல்பணி செய்யத்தந்த கருவே மருவு மலரே வடிவுடை மாணிக்கமே.

(பொ. ரை.) : செம்மை நிறம் வாய்ந்த இலக்குமி முதலான தெய்வங்கள் உனக்குத் தொண்டு செய்யும் பேற்றை அளித்த மணம் பொருந்தப் பெற்ற மலரே ! வடிவுடை மானிக்கமே ! பிறவியாகிய துயரம் ஒழிய என் உள்ளத்தில் மகிழ்ச்சியுடன் திருஒற்றியூர் ஆசாரியளும் உன் கா: வனும் நீயும் இனேந்து விள்ங்கும் அந்தக் காட்சியின் அழகையும் நான் என்றும் கண்டு இன்புறும் வாய்ப்பை அருள் வாயாக (எ . து.)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருவருட்பா-11.pdf/159&oldid=681648" இலிருந்து மீள்விக்கப்பட்டது