பக்கம்:திருவருட்பா-11.pdf/160

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

0 திருவருட்பன

(அ - சொ. செந்திரு . செந்தாமரை மலரில் விளங்கும் செம்மை நிற இலக்குவி. பணி - தொண்டு. மரு - வாசனை. கருவு - பொருந்திய கரு - பிறப்பு. குலவும் விளங்கும். திரு பேர் அழகு.

(இ - கு.) அருள், என்பதில் வியங்கோள் வினைமுற்றின் ககர விகுதி குறைந்து நிற்கிறது. மரு, பண்பு பெயர். மருவு, பெயர் எச்சம்,

(வி - ரை.) இறைவியின் திருவடிகட்குத் தொண்டு. செய்வதற்கு அவளது திருவருள் துண்ட வேண்டி இருத்த லின் பணி செய்யத் தந்த மலரே ’ எனப் பட்டாள். அம்மையப்பருடைய காட்சி இம்மைக்கும் மறுமைக்கும் பெருந்துணேயாதலின், அக்காட்சியினேயே கண்டு களிக்கும் வாய்ப்புத் தமக்கு என்றும் கிடைக்கும் வண்ணம் நம் ஐயா, இறைவரை இப்பாட்டில் வேண்டுகின்றார். இறைவி பரிமள பூங்கொடி ஆதலின், ‘மருவே மலரும் மருவே” எனப் பட்டாள். அம்மை அப்பர் உருவைக் காண்பதளுல் பெண் மயல் நீங்கும் என்பதைச் சோன்னசைல மாலே பெண் பயில் உருவமொடு நிறைந்து எனது பெண் மயல் அகற்றும் நாள் உளதோ என்று கூறுவது கொண்டு தெளிக. இந்த அர்த்த நாரீசுவரர் வடிவைக் கண்டு வணங்கியபின் வேறு சமயம் சார்ந்து வணங்கும் தெய்வம் இல்லை என்பதை அபிராமி அந்தாதி,

‘உமையும் உமைஒரு பாகனும் ஏக உருவில் வந்திங் கெமையும் தமக்கன்பு செய்யவைத் தகர் இனி எண்ணுதற்குச்

சமையங்களும்இல்லை ஈன்றெடுப் பாள்.ஒரு தாயும் இல்லை அமையும் அமைஉறு தோளியர் மேல்வைத்த ஆசையுமே”

என்று கூறுகிறது. (62)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருவருட்பா-11.pdf/160&oldid=681650" இலிருந்து மீள்விக்கப்பட்டது