பக்கம்:திருவருட்பா-11.pdf/161

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடிவுடை மாணிக்கமாலே # 5

எண்ணிய எண்ணங்கள் எல்லாம் பலிக்க எனக்குன்அருள் பண்ணிய உள்ளங்கொள் உள்ளும் புறம்பும் பரிமளிக்கும் புண்ணிய மல்லிகைப் போதே எழில் ஒத்திப் பூரணர்பால் மண்ணிய பச்சை மணியே வடிவுடை மாணிக்கமே.

(யொ தை.) நான் தினத்த எண்ணங்கள் எல்லாம் நிறைவேறும் படி எனக்கு உன் திருவருள் புரியத் திருஉள்ளம் கொள்ளுகின்ற உள்ளும் வெளியும் மணம் வீசிக் கொண் டிருக்கின்ற புண் ணிய மல்லிகை மலரே அழகிய திருஒற்றி ஆரில் குறைவின்றி நிறைவாய் வீற்றிருக்கும் இறைவரிடம் மாட்சிமையோடு அமர்ந்திருக்கும் பச்சைமணியே ! வடிவுடை மாணிக்கமே! (எ . து.)

(அ செ.) புறம் - வெளி, போது - மலர், எழில் -

அழகு. பூரணர் நிறைவாய் இருப்பவர், மண்ணிய - மாட்சிமையுடன் விளங்கிய.

(இ . கு.) பண்ணிய, செய்யிய என்னும் வாய்பாட்டு

வினே எச்சம், பால், ஏழன் உருபு.

(வி - ரை.) மல்லிகை புறத்தே மணம் வீசும். அகத்தே வீசும் ஆற்றல் அதற்கு இலது. ஆணுல், இறைவி பாம் மல்லிகை அகத்தும் புறத்தும் மனம் வீசுதலின் புண்ணிய மல்லிகைப் போதே ‘ எனப்பட்டாள். சத்தி தான் சிவத்தைச் சாரின், அச்சிவம் எத்தொழிலிலும் வல்ல தாக விளங்குதலின் அச்சிவத்திற்கு மாட்சிமை தரும் திலையில் சத்தி விளங்குகின்றாள். எனவேதான் பூரணர் ல் மண் ணிய பச்சை மணியே ’ எனப்பட்டாள். (63)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருவருட்பா-11.pdf/161&oldid=681651" இலிருந்து மீள்விக்கப்பட்டது