பக்கம்:திருவருட்பா-11.pdf/174

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5 , திருவருட்பா

அடியேன் மீசைளப் பிழை இருந் தாலும் அவைபொதுத்துச் செடியேதம் நீக்கிதல் சீர் அருள் செய்திகழ் தெய்வமறைக் கொடியே மரகதக் கொம்பே எழில் ஒற்றிக் கோ! :மே வடியேர் அயில்விழி மானே வடிவுடை மாணிக்கமே.

(பொ. ரை.) தெய்வீகம் விளங்கும் வேதத்தின் பொருளாய் விளங்கும் கொடியே! பச்சை நிறமான மரகதக் கொம்பே அழகிய திருஒற்றியூரில் வாழும் இளமைச் செல் வியே! கூர்மையான அழகிய வேலைப் போன்ற கண்ணே யுடைய மானே! வடிவுடை மாணிக்கமே! அடியவனுகிய என்னிடம் எவ்வளவு தவறுகள் இருந்தாலும், அவற்றை, எல்லாம் பொறுத்து என் பாவங்களேயும், தீமைகளே யும், குற்றங்களேயும் நீக்கி உன் நல் சீரை அடியேனுக்கு அருள் செய்வாயாக.” (எ . து.)

(அ - செ.) மறை வேதம். கோமளம் . இளமை, வடி - கூர்மை. ஏர் அழகு. அயில் - வேல். அடியேன் இசை - அடியேனிடம். செடி தீமை ஏதம் குற்றம்.

(இ . கு.) வடி, உரிச்சொல். அயில் விழி, உவமத் தொகை. அடியேன் மிசை, மிசை ஏழின் உருபு. செடி ஏதம், உம்மைத்தொகை.

(வி ரை.) இறைவி வேதப் பொருளாய் விளங்கு தலின் மறைக் கொடியே’ எனப்பட்டாள். அகிலாண்ட கோடிகளை ஈன்றெடுத்தும் கன்னித் தன்மை குறையாது இருக் தலின் அவள் கோமளமே” எனப்பட்டாள். மாதர்களின் விழிகட்கு வேலை உவமை கூறுதல் புலவர் மரபு ஆதலின், :அயில் விழி மானே’ எனப்பட்டாள். குற்றம் செய்வது ஆன்மாக்களின் இயல்பாதலின், அக் குற்றங்களையும் குண மாகக் கொண்டு, அவ் வுயிர்களேக் காப்பது இறைவியின்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருவருட்பா-11.pdf/174&oldid=681665" இலிருந்து மீள்விக்கப்பட்டது