பக்கம்:திருவருட்பா-11.pdf/177

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடிவுடை மாணிக்கமாலை I 67

மாணிக்க வாசகர், ‘கண்ணப்பன் ஒப்பதோர் அன் பின்மை கண்டபின்’ என்று கூறியதோடு நில்லாமல் அவர் இறைவரை ஏத்தியதை,

பொருட்பற்றிச் செய்கின்ற பூசனேகள் போல்விளங்கச்

செருப்புற்ற சீரடி வாய்க்கலசம் ஊன் அமுதம்

விருப்புற்று வேடர் சேடறிய மெய்குளிர்ந்தங்

அருட்பெற்று நின்றவா தோள் நோக்கம் ஆடாமோ’ என்றும் அறிவித்துள்ளனர்.

திருஞானசம்பந்தர் வாய் கலசமாக வழிபாடு செய்யும் வேடன்” என்றும், அப்பர், கையதோர் இறைச்சிப்பாரம் தோல்பெரும் செருப்புத் தொட்டுத் துரயவாய்க் கலசம் ஆட்டி’ என்றும், கண்ணப்பர் காளத்தியாரை ஏத்திய நிலயைப் புகழ்ந்து போற்றியுள்ளனர்.

மேலும் சைவசித்தாந்த சாத்திர நூல்களில் ஒன்றாகிய திருக்களிற்றுப் படியாரும்,

‘கண்ணப்பன் ஒப்பதோர் அன்பின்மை என்றமையால் கண்ணப்பன் ஒப்பதோர் அன்பதனைக்-கண்ணப்பர் தாமறிதல் காளத்தி யார் அறிதல் அல்லது.மற். றியாம் அறியும் அன்பன் றது’

என்று கண்ணப்பருக்கும் காளத்தியாருக்கும் இருக்கும் அன் புடைமையினப் போற்றுகிறது. இன்னுேரன்ன காரணங்க ளால் ‘கண்ணப்பன் ஏத்தும் நல் காளத்தியார்’ என்று நம் ஐயா போற்றியுள்ளனர். அவ்வத் தலத்துக்கு ஏற்ப இறைவர் திருப்பெயர் கொண்டு திகழ்கின் ருரே அன்றி, எல்லாத் தலங்களிலும் இருப்பவர் ஒரே சிவபெருமான் தான். ஆகவே தான், காளத்தியார் மங்கலம்கொள் ஒற்றிதண் அப்பர்” என்று இங்குக் கூறப்பட்டனர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருவருட்பா-11.pdf/177&oldid=681668" இலிருந்து மீள்விக்கப்பட்டது