பக்கம்:திருவருட்பா-11.pdf/179

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடிவுடை மாணிக்கமாலை | 6.9

இங்குத் தனியாக ஒரு பெரிய கோபுரம் காணப்படும். இதனேக் கிருட்டின தேவராயர் கட்டினுள் என்பர். இதற்கும் கோவிலுக்கும் தொடர்பு இல்லாமல் இருக்கும். இது ஆற்றிற்குப் போகும் வழியில் அமைந்துளது.

இத்தலம் மலைத் தொடர்புடையது. இதன் சுற்றளவு பதினெட்டுக் கல். இந்தப் பதினெட்டுக் கல் தொலைவையும் சுவாமி சிவராத்திரியின் போதும், மாட்டுப் பொங்கலின் போதும் சுற்றிவருகிறர். அப்போதுதான் மக்களும் மலேயைச் சுற்றி வருவர். இறைவர் இவ்விரு நாட்களில் சுற்றி வருவதன் நோக்கம் மலேயில் வாழும் முனிவர்கட்கும் ஏனேயோர்க்கும் காட்சி அளிப்பதற்காகவே ஆகும்.

வைகாசியில் வசந்தோற்சவம் அமைதியாக நடை பெறும். அந்தாள்களில் காளத்தியப்பர் அலங்காரத்துடன் ஆற்றில் இறங்கி அன்பர்கட்குக் காட்சி அளிப்பர். இங்கு முப்பது அடி ஆழத்தில் பாதாள விக்னேசுவரர் என்னும் பெயரில் பிள்ளே யார் காட்சி அளிக்கின் ருர். உள்ளே இறங்கப் படிகள் உண்டு.

காளத்தியப்பருக்குத் தும்மைப் பூவைச் சூட்டுவது சிறப்பாகும். காளத்தியப்பருக்குப் பக்கத்திலேயே கண்ணப்பு நாயனுர் இருந்துகொண்டு காட்சி அளிக்கின் ருர், பிராம்மணராகிய திருஞான சம்பந்தர் கண்ணப்பரைக் கண்டு வணங்கினமையால்தான் காளத்தியப்பரை வணங்கிய பேறு பெற்றார் என்பதைச் சேக்கிழார், கும்பிட்ட பயன் காண்பார் போல் மெய்வேடர் பெருமானேக் கண்டு வீழ்ந்தார்” என்று அறிவித்துள்ளார்.

கண்ணப்பர் திருவுருவைக் கருவறையில் (மூலட்டானத் தில்) கண்டு களிப்பதோடின்றி வெளியில் கோவிலைச் சுற்றி வரும்போதும், கடைவீதியிலும், மலேயின் உச்சியிலும் கண்டு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருவருட்பா-11.pdf/179&oldid=681670" இலிருந்து மீள்விக்கப்பட்டது