பக்கம்:திருவருட்பா-11.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

 திருவருட்பா

பெற்ற தலங்களுள் திருஒற்றியூரும் ஒன்று. அல் ஒலேயில், திருஒற்றியூர்த் தியாகேசன் திருவருளால் ‘திருஒற்றியூர் நீங்கலாக” என்னும் தொடர் கட்டளை பிறப்பித்த அரசலுைம், எழுதியவர்களாலும் அறிந்துகொள்ள முடியாத நிலையில் அமைந்துவிட்டது. இந்தவாறு ஒலயில் பதிவான காரணத்தால் (அதாவது திருஒற்றியூர் மட்டும் ஒற்றிவைக்கப் பட்டமையினுல்) இத்தலம் ஒற்றியூர் என்னும் பெயரைப் பெற்றது. திரு என்பது ஒற்றியூர் என்பதனைச் சிறப்பிக்கும் அடைமொழி. இங்ஙனம் திருஒற்றியூர்த் தியாகர் காந்தாதா எதுழுவித்த ஒலயில் உள்ள எழுத்துகளை அறிந்து மாற்றம் செய்ததால் திருவொற்றியூர்ப் பெருமான் என்றும், எழுத்தறி பும் பெருமான் என்றும் அழைக்கப்பட்டனர்.

மேலே கூறிய வரலாற்தைச் சிறிது மாற்றியும் கூறுவர். அதாவது, அரசன் - தனது ஆட்சிக்குட்பட்ட ஊர் கட்கு இந்த அளவுக்கு வரிப்பணம் கட்டவேண்டுமென்று எழுதிச் சுற்றறிக்கையாக அனுப்பிஞன். அப்படி வரி விதிக்கப்பட்ட ஊர்களில் திருஒற்றியூரும் ஒன்றாகும், ஆளுல் இறைவன் திருவருளால் அச் சுற்றறிக்கை ஒலையில் எழுதப்பட்ட வரிகள் பிளவுபட்டு அவற்றின் இடையே இவ்வாண ஒற்றியூர் நீங்கலாக” என்று எழுதப்பட்டுவிட்டது. இவ்வாறு எழுதப் பட்டதை அரசனுே, அவ்வாணயை எழுதிய எழுத்தாளர் களோ அறிந்திலர், ஆகவே, வரிகட்டுதல் வேண்டும் என்னும் விதியிலிருந்து, இத்தலம் ஒற்றிவைக்கப்பட்டமை யின், இது திருஒற்றியூர் என்னும் பெயரைப் பெற்றது. என்பதாம். இந்த அற்புத நிகழ்ச்சியைச் சேக்கிழார் பெரு கானுர், ஏட்டு வரியில் ஒற்றியூர் நீங்கல் என்ன எழுத்தறியும் தாட்டம் மலரும் திருதுதலார் ‘ என்று எடுத்து மொழிந் ஆi rat, இந்த வரலாற்றை உளத்தில் கொண்டே நம் Air எாலார், எழுத்தறியும் பெருமான் மாலை என்னும் பெயரில் ஒரு துல் முப்பத் தொரு பாடல்களில் பாடியுள்ளமை காண்க

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருவருட்பா-11.pdf/18&oldid=681671" இலிருந்து மீள்விக்கப்பட்டது