பக்கம்:திருவருட்பா-11.pdf/181

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடிவுடை மாணிக்கமாலை 7

விணுவ அர்ச்சகர் அஞ்சிப் பொய்யாகக் காளத் தி அப்பருக்கு மயிர் முடி இருத்தலின் அது ஒருவேளை இதில் சேர்ந்திருக்க லாம்’ என்று கூறினர். அரசன், ‘அப்படியானுல் அம் முடியை நான் நாளே பார்க்க வருகின்றேன்” என்று கூறினுன். அர்ச்சகர் காளத் தியப்பரை அணுகித் தம்மை எவ்வாறேனும் காப்பாற்ற வேண்டுமென்று முறையிட, இறைவர் அவ் ‘வர்ச்சகர் பொருட்டுக் குடுமியுடன் இருந்தார். அரசர் வந்த போது அர்ச்சகர் குடுமியைக் காட்ட, அரசனும் வியந்து வணங்கிச் சென்றான். இக் காரணத்தினுல் இறைவர்க்குக் குடுமித் தேவர் என்னும் பெயர் வந்தது என்பர்.

இங்கு மணிகண்டேசுரர் ஆலயமும் உண்டு. இதில் திருமால் கோவிலும் உண்டு. மலே ஓரமாக ஆறு கல் தூரம் சென் ருல் வெய்லிங்கக் கோனு (ஆயிரம் லிங்கம் உள்ள கோவில்)வையும் கண்டு இன்புறலாம். இதனே அடர்ந்த காட்டைக் கடந்து தரிசிக்க வேண்டும்.

திருக்காளத்தியில் இரண்டு குன்றுகளின்மீது துர்க்கை கோயிலும், குமரன் கோயிலும் இருப்பதைக் கண்டு வணங்க லாம். இவ்விரு குன்றுகளேயும் அடைய நல்ல படிகள் உண்டு.

திருக்காளத்தி மலேக்காட்டில் தீப மரங்கள் உண்டு. இந்த உண்மை சோதிமா மரங்களால் எந்தையால் திருக் காளத்தி மலையினில் இரவொன்றில்லை’ என்று சேக்கிழார் கூறுதலால் அறியவருகிறது.

இத் தலத்தில் பல கல்வெட்டுகள் உண்டு. அவற்றின் மூலம் மூலட்டானத்து இறைவர் காளத்தி உடைய நாயனுர், திருக்காளத்திச் சிவளுர், ஆளுடையார், தென் கயிலாய முடையார் என்னும் பெயர்களையும் உடையவர் என்பது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருவருட்பா-11.pdf/181&oldid=681673" இலிருந்து மீள்விக்கப்பட்டது