பக்கம்:திருவருட்பா-11.pdf/186

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 75 திருவருட்பா

உயிர்களேயும் பெற்றாய். அவைகள் எல்லாம் இன்பக் கடலில் மூழ்கும்படி திருவருள் புரிகின்றாய். நானும் நீ படைத்த பொருள்களில் ஒருவன். இருக்க நான் மட்டும் இன்பக் கடலில் திளேக்காமல் மிகுதியும் துன்பக் கடலில் மூழ்கி வருந்துதல் உன் திருவருட்குப் பெருமை தருமா? என்று உரிமையுடன் நம் ஐயா தேவியை வினவு கின் ருர், . (78)

வேதங்கள் ஆய்ஒற்றி மேவும் சிவத்தின் விளைவருள் ஆய்ப் பூதங்கள் ஆய்ப்பொறி ஆய்அப் புலன் ஆகிப் புகல்கான பேதங்கள் ஆய் உயிர் ஆகிய நின்னை இப் பேதைஎன்வாய் வாதங்க ளால்அறி வேனே வடிவுடை மாணிக்கமே.

(பொ , ரை.) வடிவுடை மாணிக்கமே! நீ வேதங்க ளாய், திருஒற்றியூரில் விளங்கும் சிவபெருமானுல் உண்டாக் கப்பட்ட திருவருளாய், பூதங்களாய், பொறிகளாய், புலன்க ளாய் கூறப்படுகின்ற அந்தக்கரணங்களின் பல வடிவாய், உயிர்களாய் விளங்கும் உன்னே இந்த அறிவிலியாகிய நான் என் வாயிலிருந்து வருகின்ற தர்க்க வாதத்திற்கு உரிய மொழி களால் அறிந்துகொள்ள முடியுமோ? “ (எ . து.)

(அ - சொ.) மேவும் - பொருந்தியிருக்கும். புகல் - சொல்லப்படுகின்ற பேதங்கள் வேறுபாடுகள். பேதை . அறிவீனன். வாதம் - தருக்கம்.

(இ.கு.) புகல் காரணம், வினைத்தொகை. அறி வேனே, ஒகாரம் எதிர்மறைப் பொருளது.

(வி . ஒர.) இறைவி வேதம், அருள், பூதம், புலன், பொறி, கரணம் ஆகிய வடிவுடையவளாய் உள்ளாள் என்பதை நம் ஐயா இப்பாட்டில் உணர்த்துகின்றர். வேதங்கள் ஆவன அறம், பொருள், இன்பம், வீடு என்னும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருவருட்பா-11.pdf/186&oldid=681678" இலிருந்து மீள்விக்கப்பட்டது