பக்கம்:திருவருட்பா-11.pdf/187

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடிவுடை மாணிக்கமாலை ; 77

பொருள்களை உணர்த்தும் நூல்கள். வடவர் கூறுகின்ற இருக்கு, யசுர், சாமம், அதர்வனம் என்னும் நான்கு வேதங் கள் என்று பொருள் காணினும் பொருத்தமே. பூதங்க ” E6, நீர், தீ, காற்று, ஆகாயம் என்பன. பொறிக ளாவன மெய் (உடம்பு) வாய், கண், மூக்கு, செவி (காது) என்பன. புலன்கள் ஆவன ஊறு (தொடு உணர்ச்சி) சுவை, பார்வை, மோப்பம், கேட்டல் ஆகியவை. பொறிகள் தொழிற்படுகின்றபோது இப் பெயர்கள் அமைகின்றன . ஐம்பொறிகளை ஞானேந்திரியங்கள் என்பர், ஐம்புலன்களைக் கன்மேந்திரியங்கள் என்றும் கூறுவர். அப்போது வாக்கு, கால், கை, மலங்கழி இடம், சிறுநீர் கழியும் இடம் என்று பொருள்படும். கரண பேதங்கள் ஆவன மனம், புத்தி, சித்தம், அகங்காரங்கள். மனமாவது பற்றும் தன்மையது, புத்தி நிச்சயிக்கும் தன்மையது. அகங்காரமாவது தருக்கி எழும் தன்மையது. சித்தமாவது சிந்திக்கும் தன் மையது.

இறைவி எல்லாமாய் இருப்பவள். அவளே வேதமாக வும், பொறி புலன்களாகவும், பூதங்களாகவும், மட்டும் உள்ளாள் என்று ஒருசிலர் சாதிக்கும்போது அச் சாத்னேயை எதிர்த்துத் தம் கொள்கையின நில நிறுத்துபவர்களும் உலகில் உண்டு. ஆதலின் அவர்களே உளத்தில் கொண்டே தம் வள்ளலா’, ‘என் வாய் வாதங்களால் அறிவேனே’

என்று கூறிக்கொள்கின்றர்.

இறைவன் தன் அருளயே தன் தேவியாக அமர்த்திக் கொண்டான் என்று சாத்திரங்களும் புராணங்களும் கூறும். இதனை “அருளது சத்தியாகும் அரன்.தனக்கு’ என்று சிவஞான சித்தியாகும்,

1 2

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருவருட்பா-11.pdf/187&oldid=681679" இலிருந்து மீள்விக்கப்பட்டது