பக்கம்:திருவருட்பா-11.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடிவுடை மாணிக்கமா80

‘சங்குடையான் தாமரையான் தாள் முடியும் காண்பரிதாம். கொங்குடைய கொன்றைக் குளிர்சடையாய் கோதை ஒரு பங்குடையாய் ஏழைமுகம் பாராது தள்ளிவிட்டால் எங்கடைவேன் ஐயா எழுத்தறியும் பெருமானே’ என்பது அந்நூலில் உள்ள ஒரு பாடல்.

கடல் ஒற்றிச் சென்றதால் இப்பெயர் பெற்றது என்பாரும் உளர்.

பதும் கற்பத்தின் பிரளய காலத்தில் தனக்குத் திருவருள் புரியப் பிரமன் தவம் செய்தான். அவனது யோகாக்கினி மத்தியில் இறைவன் விசித்திர 4 வடிவில் தோன்றி அவ்வக்கினியையே கோவிலாகக் கொண் டனன். அங்ஙனம் கொண்டு பிரளய வெள்ளத்தை ஒற்றி (தள்ளி)ப் போகும்படி ஆணே இட்டைமையினே, இத்தலம் திருஒற்றியூர் எனும் பெயரைப் பெற்றது என்று கூறுதலும் உண்டு: -

இறைவர் படம்பக்கநாதர் என்று அழைக்கப்படுவார். வாசுகி என்னும் பாம்பு உபமன்யு முனிவரிடம் சிவதீட்சை பெற்று, ஒற்றியூர் இறைவனே வழிபட்டது. அப்பாம்பை இறைவர்தம் திருமேனியில் ஐக்கியம் செய்து கொண்டனர். இதுபோது திருஒற்றியூர்ப் பெருமானின் மூல உருவில் பாம்பு வடிவம் காணப் படுவதைக் கண்டு களிக்கலாம்.

திருவள்ளுவருக்கு மாணவராக அமையும் பேறுபெற்ற ஏலேல சிங்கச் செட்டியார் அரசனுக்குச் செலுத்தவேண்டிய கப்பப் பணம் இல்லாமையால் துயருற்று, ஒற்றியூர்ப் பரம னிடம் முறைஇட அப்பெருமான் மாணிக்கம் ஒன்றை ஈந்து கப்பம் கட்டுமாறு செய்தனர். அங்ஙனம் மாணிக்கம் தந்து, திருவருள் புரிந்தமையில்ை, இறைவர் மாணிக்கத் தியாகக் எனும் பெயரைப் பெற்றனர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருவருட்பா-11.pdf/19&oldid=681682" இலிருந்து மீள்விக்கப்பட்டது