பக்கம்:திருவருட்பா-11.pdf/192

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

182 திருவருட்பா

இந்த உலகறிந்த முருகன் ஒருவனுல்தான் அசுரர்க ளாகிய கடல் வற்றச் செய்யமுடியும் ஆதலின், அத்தகைய முருகனே உமாதேவி ஈன்றனள் என்க. இறைவனே முருகப் பெருமானைத் தோற்றுவித்தவன். அப்படி இருந்தும் உமை ஈன்ற செவ்வேள் என்று கூறப்பட்டதன் கருத்து உபசார வழக்குப்பற்றி என்க. இதன் விளக்கத்தைக் கந்தபுராணத் தில் காண்க.

சூரபதுமன் இறைவனே நோக்கித் தான் எக் கருவியின லும் அழிக்கப்ப டாதவனுக இருக்க வேண்டுமென்று வரம் கேட்டபோது, இறைவன். நம் சத்தி (வேல்) மட்டும் உன்னே வெல்லும்’ என்று கூறியிருத்தலின் அந்தச் சத்தியை ஈன்த தேவி என்னும் கருத்தில் செவ்வேலை ஈன்று என்று பாடம் கொண்டு பொருள் காண்பாரும் உளர்.

இறைவிக்குப் பல பெயர்கள் உண்டு. அப் பெயர்களுள் ஒன்று ஏலவார் குழலி என்பது. இந்தப் பெயரையுடைய தேவி காஞ்சியம்பதியில் ஏகாம்பரநாதர் கோவிலில் விளங்கிக் கொண்டிருக்கிருள். இதனை அழகுற நம் சுந்தரமூர்த்தி சுவாமிகள்,

‘ஆலந் தான் உகந்து அமுதுசெய் தானே

ஆதி யை அம ரர்கள் தொழு தேத்தும் சிலம் தான் பெரி தும் உடை யானைச்

சிந்திப் பார் அவர் சிந்தையு ளான ஏல வார்குழ லாள்உமை நங்கை

என்றும் ஏத்தி வழிபடப் பெற்ற கால காலனேக் கம்பன் எம்மானக்

காணக் கண் அடி யேன்பெற்ற வாரே’

என்று பாடி அறிவித்தல் காண்க. இதை உளத்தில் கொண்டே ஏல வார் குழல் மானே’ என்று கூறினர். (78)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருவருட்பா-11.pdf/192&oldid=681685" இலிருந்து மீள்விக்கப்பட்டது