பக்கம்:திருவருட்பா-11.pdf/195

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடிவுடை மாணிக்கமாலே $ 85

(வி - ரை.) வல்லவனுக்கு வல்லவன் என்பது நாட்டில் வழங்கும் ஒரு பழ மொழி. அந்தக் குறிப்பில் தான் நம் ஐயா ‘வல்லார் எவர்கட்கும் வல்லார்’ என்றனர். மக்களுள் ஒரு சிலர் பிற விடம் சென்று பாசிப்பதையே பெருமையாகக் கொள்வர். அவர்களே உளத்தில் கொண்டே நம் ஐயா, ‘கல்லார் இடத்தில் இல்லாமை செல்லிக் கலங்கி இடர் நல்லாண்மை உண்டு” என்றனர். இறைவியினிடம் என்றும் அருள்புரியும் பண்பு அமைந்திருத்தலின் *அருள் வல்ல ன மை’ என்றனர். அருள் வல்லாண்மை உண்டெ னில்’ என்று கூறியதன் கருத்து இறைவியைத் துாண்டித் தாம் அருள் பெறுவதற்காக ஆகும். (8

சுந்தா வான்முகத் தோகாய் மதைகள் சொலும்1ைங்கிள்ளாய் கந்தர வர் குழல் பூவாய் கருணைக் கடைக்கண்நல்காய் அந்தர நேர் இடைப் பாவாய் அருள் ஒற்றி அண்ணல் மகிழ் மந்த நேர்கொங்கை மங்காய் வடிவடை மாணிக்கமே.

(பொ. ரை.) அழகிய ஒளி பொருந்திய முகத்தைப் பெற்றுள்ள மயிலே வேதங்கள் புகழ்ந்து பேசும் பச்சைக் கிளியே! மேகத்தைப் போன்ற நீண்ட கூந்தல்யுடைய நா.கணவாய்ப் பறவை போன்றவளே கருண பொழியும் கடைக்கண் படைத்த நங்காய் அளவான, ஒழுங்கான இடையினயுடைய பதுமை போன்றவளே. திருவருளேச் செய்யும் திருஒற்றிப் பரமர் மகிழும் வண்ணம் மந்தர மலை போன்ற பருத்த முலேகக் யுடைய மங்கையே வடிவுடை மாணிக்கமே! (எ . து.)

(அ . சொ சுந்தரம் - அழகு, வாள்.ஒளி தோகை. மயில், மறைகள் - வேதங்கள். பைங்கிள்ளே - பச்சைக்கிளி. கந்தரம் . மேகம். வார் - நீண்ட குழல் கூந்தல். பூவை - தாகணவாய்ப் பறவை, அந்தரம் - அளவு. தேர் ஒழுங்கு.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருவருட்பா-11.pdf/195&oldid=681688" இலிருந்து மீள்விக்கப்பட்டது