பக்கம்:திருவருட்பா-11.pdf/199

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடிவுடை மாணிக்கமாலை 8

கொடு” என்று சொல்லிக்கொண்டு புல்லரிடைச் செல்லும் பெருவேட்கை கொண்டவர்களின் உள்ளத்தில் உன் திருவடி கள் தங்குமோ?” (எ . து.)

(அ - செ.) ஆர் . பொருந்தும். வாதாக் - வழக்காடி யவர். தாதா கொடு. புல்லர் - அற்பர். மாதாகம் . பெருவிருப்பம். வைகும் கொலோ - தங்குமோ.

(இ . கு.) வாது+ஆர், எனப்பிரிக்க (வாதம் செய்யும் குணம் பொருந்திய என்பது பொருள்.) உணவு + உடை எனப் பிரிக்க. மா, உரிச்சொல். கொல், அசைச் சொல்.

),

(வி. ரை.) உத்தம மாதர்களின் கண் காதருகே செல் லும் அளவுக்கு நீண்டிருக்கும். அந்தக் கருத்தில்தான், கோதா நெடுங்கண்’ என்று பெண்களின் கண்கஜன் வர்ணிப்பர். சுந்தரரைத் தம் அடிமையாக்கும் பொருட்டு, இறைவர் வாதாடியதை மனத்தில் கொண்டே இங்கு நம் ஐயா, வாதார்’ என்று இறைவரைக் குறித்தனர். நாம் நமக்கு வேண்டியதை இறைவியைக் கேட்டே பெறவேண்டி இருக்க அதை விடுத்து அற்பர்களே அடைந்து வள்ள லே! என்று கூறி, உணவு கொடு, உடைகொடு என்று கேட்டால் இறைவி எங்ஙனம் அத்தகையவர்கட்கு அருள் செய்வாள்? ஆகையில்ை நம் ஐயா இறைவியை நோக்கி, ‘மாதாகம் உற்றவர்தம் நெஞ்சில் நின் அடிவைகுங் கொலோ’ என்று வினவுவார் ஆயிஞர். நம் சுந்தரரும் புலவர்களே நோக்கிப் புல்லர்களைப் புகழ்ந்து பாடாதீர்கள்! இறைவனேப் பாடுங்கள். அவ் விறைவேர் உணவு உடை முதலியவற்றைக் கொடுப்பார் என்னும் கருத்தில்,

  • தம்மை யேபுகழ்ந் திச்சை பேசினும்

சார்வினும் தொண்டர் தருகிலாப் பொய்ம்மை யாளரைப் பாடாதே எந்தைப்

புகலூர்ப் பாடுமின் புலவீர்காள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருவருட்பா-11.pdf/199&oldid=681693" இலிருந்து மீள்விக்கப்பட்டது