பக்கம்:திருவருட்பா-11.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

# 0 திருவருட்டா

மேலும் ஆதிபுரீஸ்வரர், புற்றிடம் கொண்டார் என்னும் பெயர்களும் ஒற்றித் தியாகருக்கு உண்டு. திருஒற்றியூர் ஆதிபுரி என்று கூறப்படுவதனுல், இத்தலத்து இறைவனே ஆதிபுரீஸ்வரர் என்றும், இறைவரின் கரு அறை (மூலட்டானம்) பாம்புப்புற்று வடிவில் திகழ்தலின் புற்றிசர் என்றும் பெயர் பெற்றனர் என்று காரணம் கூறுவர். இறைவர் புற்றிடம் கொண்டவர் ஆதலின் அவர்மீது என்றும் கவசம் இடப்பட் டிருக்கும். அக்கவசம் ஒவ்வொரு கார்த்திகை பெளர்ணமி தினத்தன்றும், அதற்கு அடுத்த இரண்டு தாள்களிலும் மட்டும் எடுக்கப்படும். அந்தச் சமயத்தில் இறைவர் புற்றக இருக்கும் நிலையின நேரில் கண்டு களிக்கலாம். கவசம் சத்தப்பட் டிருக்கும்போது புற்றின் ஒரு பகுதியை மட்டும் பார்க்கலாம்.

இத்தலத்து விருட்சம் மகிழமரமாகும். இம்மரத்தடியில் தான் சுந்தரர் சங்கிலியாரை மண க்கும்போது திருஒற்றியூர் எல்லேயை விட்டுப் பிரிவதில்லை ‘ என்று சத்தியம் செய்து கொடுத்தனர். இவ்விழா மகிழடிசேவை என மாசி மாதத் தில் சிறப்பாக நடத்தப்படுகிறது.

இங்குள்ள தீர்த்தங்கள் அலேவாய் (கடல்) தீர்த்தம், பிரம்ம தீர்த்தம் என்பன. அலைவாய் இத்தலத்திற்கு அருகில் இருப்பதால் கடலும் தீர்த்தமாயிற்று. உேகைக்கும் தண்கடல் ஒதம் வந்துலவும் ஒற்றியூர்’ என்று ஆளுடைய நம்பிகள் பாடுதல் காண்க

இத்தலத்தில் தொண்டைமான், மாந்தாதா, ரோமச முனிவர், நந்திதேவர், திருமால், பிரம்மன், வால்மீகிமுனிவர், சந்திரன், வாசுகி, சேடன், லவன், ஐந்தருக்கள் (மரங்கள்) ஆகியோர் பூசித்துப் பேறு பெற்றுள்ளனர். கோவிலுக்குள், யோக தட்சணுமூர்த்தி வடிவத்தையும், ஏகபாத மூர்த்தியின் திருவுருவத்தையும் கண்டு களித்தல் வேண்டும். மாசி மாதப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருவருட்பா-11.pdf/20&oldid=681695" இலிருந்து மீள்விக்கப்பட்டது