பக்கம்:திருவருட்பா-11.pdf/204

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34 திருவருட்பா

(பொ. ரை.) புலித்தோல் உடையாகக் கொண்டுள்ள இறைவர் கண்டு மகிழும் வண்ணம் இளைய நடை நடக்கும் அன்னமே! தாமரையில் இருக்கும் இலக்குமிமுதலான பெண் களுக்கெல்லாம் கலவியே! வேலாயுதம்போன்ற கூரிய நீண்ட கண்களையும், மின்னல் போலத் தோன்றி மறையும் அழகிய இடையையும் கொண்ட பச்சைப் பசுங் கிளியே! நீ மதகுகள் நிறைந்த நீர்வளம் பெருந்திய திருஒற்றியூரில் வாழ்கின்ற வாழ்வே: வடிவுடை மாணிக்கமே “” (எ . து.)

(அ - சொ.) ஒண்புலி - கண் ஒளியுடைய புலி. உவக்கும் - மகிழும். மலர்ப்பொன் - தாமரையில் வாழும் இலக்குமி. பொன் - இலக்குமி. நாயகமே. தலைவியே. படை - வேலாயுதம். அன்ன - போன்ற ஏர் - அழகிய.

(இ.கு.) கண்டு + உவக்கும் எனப்பிரிக்க. மலர்ப்பொன், ஏழாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்கத் தொகை. அன்ன, உவம உருபு. மீன் --ஏன், எனவும், மின் + நேர் எனவும் பிரிக்கலாம்.

(வி - ரை தாருகா வனத்து இருடிகள் ஏவிய புவியைக் கொன்று அதன் தோல இறைவர் உடையாக உடுத்திக் கொண்டார் ஆதலின் புலித்தோல் உடையார்” எனப் பட்டார். திருஒற்றியூரின் நீர்வளத்தைக் குறிக்க “மடை மன்னும் நீர் ஒற்றி” என்று சிறப்பிக்கப்பட்டது. ;8%)

கற்பதும் கேட்பதும் எல்லாம்தின் அந்தக் கஞ்சமர்ைப் பொற்பதம் காணும் பொருட்டென எண்ணுவர் புண்ணியரே சொற்பத மாய் அவைக் கப்புற மாய்நீண்ற துய்ச்சுடரே மற்பதம் சேர்ஒற்றி வாழ்வே வடிவுடை மாணிக்கமே.

(பொ. ரை.) சொல்லின் பால் குறிக்கப்படும் நில பாயும், சொற்களால் குறிக்கப்படும் நிலைக்கு அபயாலும் ஆய்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருவருட்பா-11.pdf/204&oldid=681701" இலிருந்து மீள்விக்கப்பட்டது