பக்கம்:திருவருட்பா-11.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

:ேடிவுடை மாணிக்கமா?ல 1 :

பெருவிழ வில் ஒன்பதாம் நாள் திருக்கல்யாண விழாவில் அகத்தியர்க்குக் காட்சி தந்த விழா மிகச் சிறப்பாக நடைபெறும்.

இத்தலத்தின் நடன தரிசனம் விசேடமானது. எக் காரணம் கொண்டும் மாணிக்கத் தியாகர் பகல் காலத்தில், வெளியே பவனி வரமாட்டார். இங்குள்ள தியாகர் மாசி மாதம் பெருவிழாவில் ஆரும் நாள் இரவு நடனக் காட்சியை அன்பர்களுக்கு அளிக்கின்றனர். இதுவே ஆரும் பவனி எனப்படும். இது சிறப்பான விழாவாகும். ஐந்தாம் பவனியும் சேடமானது. இந்த நடன விழா நந்திதேவர் பொருட்டு நிகழ்வது. நந்திதேவர் இந்த நடனத்தை மகா கயிலாயத்தில் சந்தியா காலத்தில் (மாலைச் சந்தி) பிரதோட காலத்தில் கண்டு களித்தவர். நந்திதேவர் கயிலாயத்தில் .. 6நடனம் ஆடும் நடனம் ஆகும். நந்தி தேவர் இறைவரை நோக்கி பெருமானே! அமர்ந்து இருந்து அசையும் நடனத் தைத் திருஒற்றியூரில் செய்ய வேண்டு மென்று விண்ணப் பித்துக் கொள்ள அவ் வேண்டுகோட் கிசைய அத்தகைய அசைந்தாடும் நடனத்தை இங்குப் புரிகின்றார். இதனைத் திரும்ால், பிரம்மன், ரோச முனிவர் ஆகியோர் கண்டு களிப்பர் என்பது கூறப்படுகிறது.

இந்தக் காட்சியினை நம் வள்ளலாரும் கண்டு களித்து இக்காட்சியின் சிறப்பைத் திருவுலாப் பேறு, திருவுலாவியப்பு, திருவுலாத் திறம், திருக்கோலச் சிறப்பு, காதல்மாட்சி என்னும் தலப்புகளில் பல பாக்களைப் பாடி இன் புற்றுள்ளார். அவற்றுள் ஒரு பாடல்,

1 சீரார் வளம்சேர் ஒற்றிநகர்த்

தியாகப் பெருமான் பவனிதன ஊரா ருடன்சென் றெனது.நெஞ்சம்

உவகை ஓங்கப் பார்த்தனன் காண்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருவருட்பா-11.pdf/21&oldid=681707" இலிருந்து மீள்விக்கப்பட்டது