பக்கம்:திருவருட்பா-11.pdf/212

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

202 திருவருட்பர

பெரும்பேதை யேன்சிறு வாழ்க்கைத் துயர்னனும் பேர் அயிைல் துரும்பே என அலை கின்றேன் புனதின் துணப்பதமே கரும்பே கருணைக் கடலே அருள் முக் கணிததவே அரும்பேர் அருள் ஒற்றி வாழ்வே வடிவுடை மாணிக்கமே.

(பொ. சை.) அரும்பே கருணக்கடலே திருவரு எாகிய வாழை, மா, பலா என்னும் மூன்று பழங்களின் தேனே : அரிய பெரிய அருள் நிறைந்த கிருஒற்றியூரில் வாழ்கின்ற வாழ்வே: வடிவுடை மாணிக்கமே ! 2 அறிவீளுைகிய நான் கடல் அடியில் அகப்பட்டுக்கொண்ட துரும்பைப் போல அற்பமான உலக வாழ்க்கையாம் துன்ப அலையில் சிக்கி அலகின்றேன். அத்துன்பக் கடல் அலேயி லிருந்து இன்பக் கரையைச் சேர உன் இரு திருவடிகள்தாம் எனக்குத் தெப்பமாக இருந்து துணை செய்ய வேண்டும்.” (எ . து.)

(அ சொல் முக்கனி - வாழை, மா, பலா எனும் மூன்று கனிகள். நறவு தேன். பேதையேன் - அறிவினனுகிய நான், புணே - தெப்பம். துணைப்பதம் - இரண்டு திருவடிகள். (இ கு. முக்கனி, தொகைக் குறிப்பு. பதம், குறுக்கல் விகாரம்.

(வி - ரை.) இறைவன் திருவடியே பிறவிக் கடலேக் கடந்து முத்திக் கரையின அடைதற் குத் துணை என்பதைத் திருவள்ளுவர் கடவுள் வாழ்த்து ஆதிகாரத்தில் அறுதியிட்டு உறுதிப்படுத்தி யுள்ளனர். இதன,

  • அற ஆழி அந்தணன் தாள் சேர்ந்தார்க் கல்லால்

பிற ஆழி நீத்தல் அரிது ‘ * பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்

இறைவன் அடிசேரா தாக் ‘ என்னும் குறட்பாக்களில் காண்க. இந்தக் கருத்தில்தான் புணை நின் துணப்பதமே ‘ எனப்பட்டது. (96).

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருவருட்பா-11.pdf/212&oldid=681710" இலிருந்து மீள்விக்கப்பட்டது