பக்கம்:திருவருட்பா-11.pdf/218

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20 திருவருட்டா

முழுமையினேயும் இறைவன் திருவடிகளின் பெருமையிலேயே. எடுத்து மொழிந்துள்ளார். இவ்வாறே திருவையாற்றுப் பதிகத்தினுல் திருவடி மாண்பையே வாழ்த்தி வணங்கி யுள்ளனர். தம் ஐயாவும் திருவடிப் புகழ்ச்சியினே முதல் திருமுறையின் தொடக்கத்தில் பாடிப் போற்றி யுள்ளனர். எனவேதான் நம் வள்ளலார் இந்த வடிவுடை மாணிக்க மாலேயில் ஈற்றில் வாழ்த்துப் பாடலே அமைத்து அதில் மூன்று முறை, இறைவியின் திருவடிகளே வாழ்த்தியும் போற்றியும் உள்ளனர்.

இறைவனும் இறைவியும் தம் உள்ளத்தில் இணை பிரியாது, என்றும் நிலத்து இருக்கும் பொருட்டு, வாழி என் உள்ளத்தில் நீயும் நின் ஒற்றிமகிழ்நரும் என்று வாழ்த்தி வணங்குகின்றார்,

இந்த அளவில் அம்மை அப்பருடைய திருவருளால் வடிவுடை மாணிக்க மாலேக்கு உரை எழுதி முடிக்கப் பட்டது. (1 0 | }

வடிவுடை மாணிக்கமால் உரை முற்றிற்று.

திருச்சிற்றம்பலம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருவருட்பா-11.pdf/218&oldid=681716" இலிருந்து மீள்விக்கப்பட்டது