பக்கம்:திருவருட்பா-11.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடிவுடை மாணிக்கமாலே # 3

பலி நாச்சியார் என்னும் பெரிய துர்க்கையின் கோயில் உளது. இச் சந்நிதிக்கு முன்பு ஒரு வட்ட வடிவக் கிணறு காணப்படுகிறது. அக்கிணறு ஒரு வட்டமான பாறையினுல் மூடப்பட்டிருக்கிறது. இதல்ை இக்காலத்தார் வட்டப்பு நாச்சியார் கோவில் என்பர். இவ்வம்மையாருக்குச் சித்திரை மாதம் பதினெட்டுநாள் திருவிழா நடக்கும். இந்நாச்சியார் மிகவும் உக்கிரமுடையவளாக இருந்தமையிஞல், சங்கரர் மந்திர சக்தியால் இவ்வம்மையின் உக்கிரத்தை அடக்கி இத் தேவிக்கு எதிரே உள்ள கிணற்றில் இறக்கிப் பாறையால் மூடிவிட்டனர் என்னும் செவி மரபு செய்தி கூறப்படுகிறது. இக் கோவிலுக்குள் பல சிறு சிறு கோவில்களும் உள்ளன.

சந்நிதித் தெருவில் அகத்தீஸ்வரர் கோவில் எனும் பெயரில் ஒர் ஆலயம் உண்டு. இங்கு இரண்டு சுரங்க அறைகள் இருப்பனவாகக் கூறுவர். இங்குள்ள இறைவர் அகத்தீஸ்வரர், தேவியார் அகிலாண்டேஸ்வரி.

இத்தலத்தில் சங்கிலியா என்னும் பெயருடைய அம்மையார் இறைவனுக்குப் பூத்தொடுக்கும் தொண்டில் ஈடுபட்டு வந்தார். இவ்வம்மையாரைச் சுந்தரர் கண்டு 0T விரும்பி இறைவரிடம் வேண்டினர். அவ்’ வேண்டுதலின் பயனுகச் சங்கிலியார் தம்மை பிரிவதில்லை என்று சுந்தரர் சத்தியம் செய்தால் மனப் பதாகக் கூற, அவ்வாறே சுந்தரர் சபதம் செய்து சங்கிலி யாரை மணந்தார். சின்னுள்களுக்குப் பிறகு சுந்தர தம் வாக்கை மீறித் திருவாருருக்குப் போகத் தீர்மானித்து திருஒற்றியூர் எல்லேயைத் தாண்டிக் காலடி வைத்தார். அப்படி வைத்த இடமே இதுபோது காலடிப்பேட்டை என்று வழங்கப்படுகிறது. இங்குள்ள திருமால் கோயிலின்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருவருட்பா-11.pdf/23&oldid=681718" இலிருந்து மீள்விக்கப்பட்டது