பக்கம்:திருவருட்பா-11.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

G திருவருட்பா

வடிவுடை அம்மையாருக்குப் பூசை புரிபவர்கள் ஆதி சைவக் குருக்கள் அல்லர். மலேயாளப் பிராமணர்கள் ஆசித்து வருகின்றனர்.

இத் தலத்துக்கு அப்பர், சம்பந்தர், சுந்தரர் டாடியுள்ள தேவாரப் பதிகங்கள் எட்டு. அவற்றுள் திருஞானசம்பந்தர் பதிகம் ஒன்று. அப்பர் பதிகங்கள் ஐந்து. சுந்தரர் பதிகங்கள் இரண்டு. அருணகிரிநாதர் பாடிய திருப்புகழ்கள் இரண்டு உண்டு. இராமலிங்க சுவாமிகள் இத் தலத்தின் மீது அறுபத் தேழு தலைப்புகளில் பற்பல பாடல்களைப் பாடியுள்ளனர்.

இராமலிங்க சுவாமிகளுக்கு இத்தலத்து இறைவி பல்லாற்றாலும் திருவருள் சுரந்துள்ளனள். நம் வள்ளலார் பசியினல் வருந்தி உறங்கிக் கொண்டிருக்கும்போது, வடிவுடையம்மையார் அவரை எழுப்பிச் சோறளித்துத் திருவருள் புரிந்தன ள். இதனே நம் வள்ளலாம்

‘அன்றாெருநாள் நம்பசி கண்டந்தோ தரியாது

நன்றி; வில் சோறளித்த நற்றாய் காண்’.

என்று பாடி யறிவித்துள்ளனர். இதில் திருஒற்றுயூரில் தடந்த நிகழ்ச்சி என்பதற்குரிய குறிப்பு இல்லேயாயினும், ஆருவது திருமுறையின் அருள் விளக்க மாலையில்,

  • தெற்றியிலே நான் பசித்துப் படுத்திாேத்த தருணம்

திரு அமுதோர் திருக்கரத்தே திகழ்வள்ளத் தெடுத்தே

ஒற்றியில்போய்ப் பசித்தனையோ என்றென அங் கெழுப்பி

உவந்துகொடுத் தருளியனன் உயிர்க்கினிதாம் தாயே”.

என்று குறிப்பிட்டிருப்பது கொண்டு இவ்வருட்செயல் நடந்த இடம் திருஒற்றியூர் என்றே உறுதிப்படுத்த வேண்டி இருக் கிறது. அருள் விளக்கமாலேயில் இந்த அற்புதத்தை கம் ஐயா மிகுதியும் எடுத்து மொழிந்துள்ளனர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருவருட்பா-11.pdf/26&oldid=681721" இலிருந்து மீள்விக்கப்பட்டது