பக்கம்:திருவருட்பா-11.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடிவுடை மாணிக்கமாலே

திருஒற்றியூரைப் பற்றிய கல்வெட்டுகள் பல உள்ளன. அவற்றால் பல அரிய குறிப்புகள் தெரிய வருகின்றன. இங்கு இராசேந்திரன் மடம், குலோத்துங்க சோழன் மடங்கள் இருந்தன. மண்ணக்கொண்ட சோழன் மண்டபம், இராச ராசன் மண்டபம், இராசேந்திர சோழன் கிண்டபம் எனப்

படும் பல மண்டபங்களும் இருந்திருக்கின்றன.

படம்பக்கநாதர் கோவில், வீரராசேந்திரனுல் கட்டப் பட்டது. இங்கு வியாகரன மண்டபம் ஒன்று இருந்து இலக்கணப் பாடம் நடத்தப்பட்டது. இதல்ை இத்தலத்துப் பெருமான் வியாகர்ணதானப் பெருமான் என்னும் பெயரையும் பெற்றனர். இங்கு ஆனி மாதத்தில் பெரு விழி நடந்ததாகத் தெரிகிறது. இவ் விழாவின்க் குலோத்துங்கன் கண்டு இன்புற்றுள்ளான். இவன் இராசராச மண்டபத்தில் தங்கி இருந்தனன். இத்தலத்துத் தியாக கருனேவிடங்கள் என்னும் பெயரையும் பெற்றிருந்தன ர். இங்குச் சூரியனுக்கும் ஒரு தனிக்கோயில் இருந்தது. இங்குள்ள பிள்ளையார் அனுக்குப் பிள்ளையார் என அழைக்கப்பட்டனர். வாக்கு வாதம் நடத்த வாக்கணிக்கும் மண்டபம் ஒன்று இருந்ததை யும் அறிகிருேம். இக் கோவிலில் பணி புரிந்த யாளர்கள் நூற்றுமுப்பத்தொன்பதின்மர் என்பது கல்வெட் உால் அறிய வருகிறது.

ஆதொண்ட சக்ரவர்த்தி புழல்கோட்டத்தை வென்ற போது, அங்கிருந்து கொணர்ந்த இரு பவழத் தூண்களையும், இரு வெண்கலத் துண்களேயும் கோவிலுக்குத் தானமாக அளித்துள்ளான். ஆளுல் அவற்றை இதுபோது இங்குக் காணமுடியவில்லை. ஒருவேளை கடல் கொண்டிருக்கலாம். இறைவர் மகாதேவ பட்டர், திருஒற்றியூர் மகா தேவர், ஒற்றியூர் ஆழ்வார், திருஒற்றியூர் உடைய நாயனுர், படம்பக்க தாயக தேவர் என்றெல்லாம் கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள் ஆணனர்.

2

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருவருட்பா-11.pdf/27&oldid=681722" இலிருந்து மீள்விக்கப்பட்டது